பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ-1-1-அறமுதல் உணர்தல்

63


அ -1 - அறிமுதல் உணர்தல் - 1

- தமிழில் மட்டுந்தான் இவ்வாறு மெய்ப்பொருள் உண்மையை உணர்த்துகிற சொற்களை மிகுதியும் பார்க்க வியலும், ஏனெனில் அஃது இயற்கைமொழி யாகையால் என்க. பிறமொழிகளெல்லாம் இத்தகைய உண்மைகளை மிகுதியாகக் கொள்ளாதனவும் இல்லாதனவுமாக உள்ளதை ஆய்ந்தறிக. - பின்னர் வரவிருக்கும் நிறைவுரையின்கண் இவை போலும் கூடுதலான சொற்களும், எழுத்தமைப்புகளும் இன்னும் கூடுதலாகவே விளக்கிக் காட்டப்பெறும்.

3) சொல் தொடர்களில் மெய்ப்பொருள்

உண்மைகள் உள்ளமை: - சில நேரங்களில், நம் வீட்டில் ஒருவரை இருக்கச் செய்துவிட்டு, நாம் வெளியே செல்கையில், வீட்டை நோக்கி ஏ. வீடே, உன்னைக் கவனமாகப் பார்த்துக்கொள்' என்று சொல்லாமல், வீட்டில் இருப்பவரை நோக்கி, நீங்கள் இந்த வீட்டைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்கிறோம்.

இதுபோலவே, உடல் நலம் குறைந்த ஒருவரைப் பார்த்து, நீங்கள் உங்கள் உடலை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள் என்று சொல்கிறோம். இந்தக் கூற்றை யாரை நோக்கிச் சொல்கிறோம்? நலங்குன்றியவரின் உடலைப் பார்த்தா சொல்கிறோம்? உடல் தானே தன்னைப் பார்த்துக்கொள்ள முடியாததால், அதைப் பார்த்துக் கூறுவதில்லை. பின் யாரைப் பார்த்து இதைக் கூறுகிறோம் எனில், உடலுக்குள் இருக்கும் உயிரைப் பார்த்து என்க. நாம் இது பற்றியெல்லாம் ஒன்றும் அறியாமலேயே, இயல்பாக இந்த மெய்ப்பொருள் உண்மையை வெளிப்படுத்துகிறோம். இவ்வாறு நாம் பேசும் தொடர்களிலும் ஆங்காங்கு மெய்ப்பொருள் உண்மைகள் வெளிப்படுவதை உய்த்துணர்ந்துகொள்க. இவ்விடத்துத் தொல்காப்பியம் கூறும்,

‘எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே - தொல். 640 பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும் . சொல்லின் ஆகும் என்மனார் புலவர் - தொல். 641.

என்னும் நூற்பாக்களின் உண்மையும், சொற்களுக்குப் பொருள் காண முற்பட்டால், அஃது எல்லையின்றி விரிந்துகொண்டே போகும், இறைமையின் உண்மைபோல) என்றுணர்த்த,

பொருட்குப் பொருள்தெரியின் அதுவரம்பு இன்றே

. - - தொல், 874