பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ-1-1-அறமுதல் உணர்தல்-1

65


      65 அ - 1 - - அறமுதல் உணர்தல் - 1

பொழிப்புரை ஒருவர் ஒலியும் ஒளியுமாகிய எழுத்தையும், அதன்வழிக் கருத்தையும், அதன்வழி உணர்வையும், அறிவையும், அவற்றின்வழிப் பொருட் புறவெளிப்பாடாகிய உலகையும், படிப்படியாய், ஆசிரியன் வழியும், நூல்கள்வழியும் முயன்று கற்றுக்கொண்ட அதனால் ஆகி வந்த பயன்தான் என்னவோ, (அவற்றுக் கெல்லாம் மூலமாகி) ஒளியுருவாய் நிற்கும் அறிவுணர்வாய இறைவனின் நல்ல (படைப்பு முயற்சிகளைப் போற்றியுணர்ந்துபுரந்து கொள்ளாதவராக இருப்பின்,

சில விளக்கக் குறிப்புகள்

1) கற்றதனால் - என்றதால் அதன் தொடர்பான அறிவறி முயற்சிகளையும் இணைத்துக்கொள்க அவை - பார்த்தறிதல், கேட்டறிதல், உசாவியறிதல், படித்தறிதல், பட்டறிதல், உய்த்தறிதல் ஆகிய அறுவகைத் தாம். உசாவியறிதல் - பலர் வழியும் விசாரணை செய்தறிதல். உய்த்தறிதல் - ஆராய்ந்தறிதல், ஊகம் செய்தறிதல். பட்டறிதல் - அநுபவத்து அறிதல், தானே அதில் ஈடுபட்டறிதல். கற்றல் - கல் என்னும் வேரடியாகப் பிறந்த சொல். கல்தல் - கல்லுதல் - தோண்டுதல், நிலத்தைத் தோண்டி நீர் பெறுதல் போல், மனத்தைத் தோண்டி அறிவு பெறல். தொட்டனைத் துறும் மணற்கேணி (395) என்றது காண்க. - கற்றல் - நூல்களைக் கற்றல். நூல்களாவன, வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதல்நூல்'

- - தொல், 1594. என்றும் உண்டாகி இறையால் வெளிப்பட்டு நின்றது நூலென் றுணர்'

- அருங்கலம் 9 "மெய்ப்பொருள் காட்டி உயிர்கட்கு அரணாகி துக்கம் கெடுப்பது நூல்' -

. - - அருங்கலம் 10. - எனக் குறிப்பிட்ட நூல் வகைகளை என்க. 2) ஆய பயன் - கற்ற பயன். அஃது உண்மை உணர்வதும் அதன் வழியாய அறவாசிரியனின் முயற்சிகளைப்