பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 அ அறமுதல் உணர்தல்

வேண்டும் என்றும் வற்புறுத்துவார். அவ்வாறு கற்றும் அவ்வுணர்வு எய்திவரா நிலையில் அக்கற்பு முழுமை யெய்தாமை குறித்ததுமாம் என்க.

8) எழுத்தும் மொழியும் கற்பதன் பயனைப்

புலப்படுத்துவதற்கு இதனை அதன்பின் கூறினார், என்க.

C)

க. மலர்மிசை ஏகினான் மாண்டி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ் வார். 3

பொருள் கோள் முறை: இயல்பு.

பொழிப்புரை ஐம்பொறிகளிடத்து, முன்னரே தோன்றி நின்ற புலனுணர்வுகள் முற்றிய நிலையில், மலரிடத்துப் பருவத்தால் ஏறிநிற்கும் மணம்போல மன மலரின்கண் மெய்யுணர்வாய்த் தோன்றி நிற்கும் அறமுதல்வனின் பெருமை பொருந்திய நெறிகளைப் பின்பற்றி, உலக நடை மேற்கொண்டார், இந் நிலவுலகத்துப் புகழால் நீண்ட காலத்து வாழ்வார்.

சில விளக்கக் குறிப்புகள்:

1) மலர் என்றது மனத்தை மிசை இடத்து. 2 ஏகினான் என்றது முன்பே ஏகி இருந்தமை பற்றி

போக்கு வரவு அற்ற பொருள் என்று இறைவனைத் தாயுமானார் குறிப்பிடுதல் போல், போதல் வருதல் ஏகுதல் திரும்புதல் என்றில்லாமல் இருத்தல் பொருள் கூறப் பெற்றது. ஏகினான் என்றது மன மலரின்கண் மெய்யுணர்வாய்த் தோன்றி நிற்கும் அறமுதல்வனை - இறைவனை என்க. என்னை?

பூவினிற்.கந்தம் பொருந்திய வாறுபோல் சீவனுக் குள்ளே சிவமணம் பூத்தது . - திருமந்திரம். 1459. - என்பார் திருமூலரும்."