பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

70


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 70

"இக்குறட்பாவில் முதல் அடியில் வேண்டுதல் என்பதை முதற்சீராகவும், வேண்டாமை என்பதை இரண்டாம் சீராகவும் வாசிப்பதே இயல்பான ஒசையுடையதாகத் தோற்றுகிறது. ஆனால் இஃது இலக்கண முறையில் தளைத்தவறு உடையதாய் அமைகிறது. என்றும் பிறவாறும் கூறியுள்ளார். இதனைக் கீழ்வருமாறு தளைபிறழாமல் பிரித்து எழுதினால் வகையுளி செய்ய வேண்டுவதில்லை.

வேண்டுதல் வேண்டாமை இல்லான் அடிசேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல.

இங்குக் குற்றியலிகரம் எண்ணப்படாமை மரபு.

- இது தொடர்பான குறளாட்சிகள் வருமாறு. (ஒநோ).

1. அருளல்ல தியாதெனில் (254) 2. வாய்மை எனப்படுவ தியாதெனின் (29)

2)

3. நல்லா றெனப்படுவ தியாதெனின் (324) 4. பழமை எனப்படுவ தியாதெனின் 80) 5. பேதைமை என்பதொன் றியாதெனின் (83) 6. வெண்மை எனப்படுவ தியாதெனின் (84.9 7. இன்மையின் இன்னாத தியாதெனின் (104)

வேண்டுதல் பற்றாலும் ஆசையாலும் பாசத்தாலும் ஒன்றை விரும்புதல். - . வேண்டாமை - வெறுப்பாலும், பொருந்தாமையாலும், பகையாலும் ஒன்றை விரும்பாமை வேண்டுதல் இருந்து தான்

வேண்டாமை வருதலால் அது முன் கூறப்பெற்றது.

இலான் - இவையிரண்டு வேறுபட்ட உணர்வுகளும் இல்லா தவனாகிய இறைவன் அல்லது அறவாசிரியன்.

வேண்டுதலும், வேண்டாமையும் மண் வேறுபாடுகள் . (விகாரங்கள்) வேறுபாடுகள் இல்வழி மனம் தொழிற்படுவதும் இல்லையாயிற்று; மனத்தொழில் இல்வழி மனமும் இல்லையாயிற்று மனம் இல்வழி அறிவும் இல்லை; மனமும்

அறிவும் இல்வழிப் பூத இயக்கமும் இல்லை; அஃது இல்வழி

உருவும் இல்லை; உருவம் இல்வழி இடமும் இல்லை; இடம்

- இல்வழிக் காலமும் இல்லையென்றாயிற்று.

எனவே, வேண்டுதல் வேண்டாமையிலான் ஆகிய இறைவன்