பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71

6)

9)

அ - 1 -1 - அறமுதல் உணர்தல் - 1

அல்லது அறமுதல்வன், காலமும், இடமும், உருவும், பூதப் பொருள்களும், அறிவும், மனமும் இல்லாதவனாக - அவற்றைக் கடந்தவனாக இருத்தல் வேண்டும். அவற்றைக் கடந்தவனாக நிற்றல் அவையாக நிற்றல் என்க. இவை அந்நிலையிலுள்ள அறவாசிரியனுக்கும் பொருந்தும் என்க. அடிசேர்தல் - நெறிகளைப் பின்பற்றி இயங்குதல். யாண்டும் - எங்கும் எப்பொழுதும் எந்நிலையிலும். இடத்தையும் பொழுதையும் சூழலையும் குறிக்கும். இடும்பை - மனத்துயரம் 'யாதனின் யாதனின் (74) எனப் பின்னும் இதனை உலகியல் முறையில் விளக்குவார். அறமுயற்சிகள் செய்யுழி, புறத்துன்பங்கள் மனத்துயரங்களைத் தோற்றுவியா என்று உறுதி கூறினார். முன்னைய குறள் நோக்கத்தின் விரிவு கூறினார். O

ரு. இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. 5

பொருள் கோள் முறை:

இறைவன் பொருள்சேர் புகழ் புரிந்தார் மாட்டு, இருள் சேர், இருவினையும் சேரா. ..

பொழிப்புரை: அறமுதலாகிய இறைவனின் பொருளுடைய புகழுக்குரிய அறச்செயல்களைச் செய்பவர் இடத்து, அறியாமை சேர்ந்த அறத்திற்கு எதிரான மறவினை, (நன்மைக்கு எதிரான) தீவினை ஆகிய இரு வினைகளும் செயலுக்கு உரியனவாக வந்து சேர்வதில்லை.

சில விளக்கக் குறிப்புகள்:

)

இருள் சேர் இருவினை என்பதால், இரண்டு வினைகளும்

அறியாமையால் நிகழும் வினைகளாகவே இருத்தல் வேண்டும்.