பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

72


திருக்குறள் மெய்ப்பொருளுரை பெருஞ்சித்திரனார் 72

3)

அவை மறவினையும் தீவினையுமே ஆகும். மறவினை அறத்திற்கு எதிரானது; தீவினை - நன்மைக்கு எதிரானது. மறவினை என்பது, ஒருவனைக் கத்தியால் குத்திக் கொலை செய்வது போன்றது. தீவினை என்பது, ஒருவனை நஞ்சு வைத்துக் கொல்வது போன்றது. முன்னர் உரை கண்டார், இருள்சேர் இருவினைகளுள் நல்வினையையும் அடக்கிக் கூறியது பொருந்தாது.

நல்வினையும் இருள் சேர்ந்ததாகக் கருதின், நன்று, தீது

இன்றாகி, உயிர்களுக்கு இயக்கமே தேவையில்லை என்றாகி

பயன் கொளுவப் பிறவி பயப்பதால் இருவினையும் இருள்வினை அஃதாவது அறியாமை சேர்ந்த வினை என்றால், அறிவுக்கும் சிறப்பின்மை சேர்ந்துவிடும். அறிவு தேவையின்றால் நூலும் தேவையின்றாகிவிடும். பிறவி உண்மை இன்மைக் கருத்தால் உறுதியிழந்து, இக் கருத்துக்குத் துணை நில்லாதாகிவிடும் என்க. பொருள் சேர் புகழ் - பொருளுடைய புகழ், இறைமைக்கு உள்ள புகழே பொருள் செறிந்த புகழாகும்; மற்றைய மாந்தர்க்கு வரும் புகழ், மொழி, இனம், இடம், காலம் கடந்து நிற்றல் இயலாதாகையால் பெருமை குலைதலோ அழிதலோ கொண்டதாகும். எனவே பொருளில்லாப் புகழாகும். புகழ் புரிதல் - புகழுக்குரிய செயலைச் செய்தல், அது பெரும்பாலும் அறவழிப் பட்டதாகவே இருக்கும். எனவே 'இறைவன் பொருள்சேர் புகழ் புரிபவர் அறச் செயல்களைச் செய்யும் அறவோராகவே இருத்தல் கூடும். மற்று, உலகியலால் வரும் உண்மைப் புகழைப் பிறிதோரிடத்து 'உயர்ந்த புகழ் (233 என்றார். அறச் செயல்கள் செய்யுழிப் பிற இருவினைகள் நிகழ்வதில்லை என்றார். புரிதல்' என்பார்க்கு விரும்பினார் என்று பொருள் கூறி, ‘எப்பொழுதும் செய்தல் என்று விளக்கமும் செய்வார் பரிமேலழகர் பாவாணரும் அவ்வாறே கொள்வர். ஆனால் செய்தார் என்பதே பொருத்தமுடைய பொருள் என்க. இறைவன் பொருள்சேர் புகழ் புரிந்த்ார் மாட்டு என்பதற்கு, கடவுள் இயற்கையைச் சேர்ந்துள்ள புகழை விரும்பினாரிடம் என்று கூறித் திருவிக முட்டுப்படுவர்.