பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 அ - 1 -1 - அறமுதல் உணர்தல் - 1

'இறைவன் எப்பொழுதும் தங்குகிறவன் என்பர் அடியார்க்கு நல்லார், தம் சிலப்பதிகார உரையில் (சிலப். 10 : 184 உரை)

சு. பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க

நெறிநின்றார் நீடுவாழ் வார். 6

பொருள் கோள் முறை : இயல்பு

பொழிப்புரை : (அறிவுணர்வையும் மனவுணர்வையும் அசைவுறச் செய்து, உலகியற் பொருள்களின்மேல், உடலை நுகர்வுக்கெனக் கொண்டு செலுத்தும் மெய், வாய், மூக்கு, கண், செவி எனும் ஐம்பொறிகளின் தவிப்புணர்வை, (கொழுந்துவிட்டு எரியச் செய்யாமல், தணியவைத்து எரிப்பது போல் அவிப்புச் செய்த அறமுதல் ஆசிரியனின் பொய்யற்ற ஒழுகலாற்றின் வழியில் தம்மை நிலைநிறுத்திக்கொண்டவர் , இவ்வுலகின்கண் நெடும்புகழ் எய்தி வாழ்வார்.

சில விளக்கக் குறிப்புகள்:

J) மெய் முதலாச் செவி ஈறா எண்ணியது படிநிலை அறிவால்

என்க. 2) அவிப்பது - அறவே அற்றுப்போகச் செய்யாமல் நற்பயன் கருதித் தணிவித்து எரியச் செய்வது. சேற்றில் புதைந்துவிடாமல் நீரில் மட்டும் குளிப்பது போல் பொறிகளைப் பயன்படுத்தல் வேண்டும். 3) நீடு வாழ்தல் - உலகில் பெரும்புகழ் பெற்று வாழ்தல், தோன்றிற் புகழொடு தோன்றுக’ (235 என்பார்.

எ) தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு) அல்லால்

மனக்கவலை மாற்றல் அரிது. - ... . 7

பொருள் கோள் முறை : இயல்பு