பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75

அ_1-1_அறமுதல் உணர்தல் - 1

இங்கெல்லாம் கடவுள்தாமே தமக்கு உவமையானதன்றி, பிறிதுவமை கொண்டவர் ஆக மாட்டார் என்பது தெளிவு" என்பார். இது சரியன்று.

குருவணக்கம் கடவுள் வணக்கமாயின் திருவள்ளுவரும் ஒரு குருவானவரே ஆதிபகவன் மரபினரே என்று கொண்டு அவரையும் வணங்கவும் மாறுகொள்ளார், அவர். ஆகவே அத்தகையார்க்குத் திருவள்ளுவரும் ஒரு கடவுளரே! அவரையும் இன்றும் வணங்கவே செய்வர்.

ஆனால், திருவள்ளுவர் கருத்து அஃதன்று. இங்குதான் அவர் கூறிய இறைமை நிலைக்கு விளக்கம் கிடைக்கிறது. அவர் கருத்துப்படி குரு வணக்கக் கொள்கையோ, தெய்வ வணக்கக் கொள்கையோ, கடவுள் வணக்கக் கொள்கையோ இறைக் கொள்கை அன்று. அவர் தாம் கூறும் இறைக்கொள்கைக்குத் தாமே தம்மைப் பொருத்தமாக்கிக் கொள்ளும்படி கூறியிருப்பார் என்று கருதுவது நம் அறியாமையையே காட்டும். மகாவீரரும். புத்தரும், இராமனும் இவ்வகையில் வழிபட்டுவரப்படுவதையும், பிற கடவுள் மறுப்பாளரும்கூட, புத்தர் கடவுள் மறுப்பாளரே மக்கள் அவர்கள் மேல் கொண்ட பற்றுமிகுதியாலும், நம்பிக்கையாலும் மதச் சார்பினராக்கப்பெற்று, கடவுள்களாக - தெய்வங்களாக வழிபட்டு வரப்படுவதையும் திருவள்ளுவர் அறிந்திருக்க இயலும்.

ஆனால், அவர் பொதுவின் கூறிய இறைமைக் கொள்கை என்பது, இத் தெய்வங்கள் கடவுள்கள் முதலியவற்றுக்கெல்லாம் மிக்கோங்கிய அனைத்துக்கும் மூலமான உயர்ந்ததும் ஒப்பில்லாததுமாகிய கொள்கை என்பதை இதனால் புலப்படுத்துகிறார் என்க. -

உயிா கூர்தல் அறவியலின்படி, கடவுளின், அதனினும் அடுத்த கீழ்நிலையான தெய்வத்தின், இனி அதனினும் மிகக் கீழான நிலையான மீமிசைமாந்தனின் அல்லது குருவின், இனி, அவற்றினும் மிக விழிந்த கீழிறங்கிய நிலையாக உள்ளவனே மாந்தன் என்க. இக் கீழ்ப்படி நிலையை மேனிலைப்படியாகக் கொண்டு மேலேறிச் சென்றால், அனைத்துப் படிநிலைகளுக்கும் மேலோங்கி நிற்பதும் இவ்வனைத்து உயிரியங்கியல் படிநிலைகளை மட்டுமன்றி, பொருளியங்கியல் படிநிலைகளையும் உள்ளடக்கிக் கொண்டு அதே பொழுது முன்னுள்ள அனைத்து நிலைகளினின்றும் வேறாகித்

தன்னைத் தனிப்படுத்திக் கொண்டும், ஒன்றுபடுத்திக் கொண்டும்

உள்ள ஒரு நிலையே இங்கு ஆசிரியரால் கூறப்பெறும் இறைநிலை - - - - - Ꭴ.

என்று உய்த்துணர்க.