பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

76


திருக்குறள் மெய்ப்பொருளுரை. பெருஞ்சித்திரனார் 76

அ. அறவாழி அந்தணன் தாள்சேர்தார்க்(கு) அல்லால்

பிறவாழி நீந்தல் அரிது 8

பொருள் கோள் முறை : இயல்பு

பொழிப்புரை அறக்கடலாகிய இறைவனின் வழிநின்ற அருளாளனின் அறமுயற்சிகளில் தம்மை இணைத்துக்கொண்டவர்களுக்குத் தவிர, மற்றையவர்கள் பிறப்பாகிய வாழ்க்கைக் கடலை இயல்பாக நீந்திக் கடத்தல் கடினம்.

சில விளக்கக் குறிப்புகள்:

1. (பிறவு ஆழி பிறவாழி, பிறவு பிறப்பு - வாழ்க்கை. உகர வீற்றுப் பெயர்ச் சொல். துறத்தல் துறவு, இறத்தல் இறவு எனற்போல், பிறத்தல் பிறவு என்றார். பெருந்தகை பிறவினோ டிறவு மானான் (தேவாரம்) என்றது காண்க.

2) நீந்தத் தெரியாதவர் நீரில் தத்தளித்துத் துன்புற்று, இறுதியில் மூழ்கி மறைதலால் நீந்திக் கடத்தல் அரிது என்றார்.

3) வாழ்க்கையை ஆழி (கடல் என்றது அகற்சியும் ஆழமும் ஏதங்களும் நிறைந்திருத்தலான். ஆழி என்பதைச் சக்கரம் என்றும் பலர் பொருள் கொள்வர். நீந்தல் குறித்தலால் அது பொருந்தாது என்க. . . . . அந்தணர் என்போர் அறவோர் என்பார்.

5. 'அறம் என்பதற்குத் தமிழில் தவிர வேறு எம்மொழியிலும் தெளிவான பொருள் இல்லை என்று கருத வேண்டியுள்ளது. ஆங்கிலத்தில் அதற்கு morality, ethics, righteousness - என்று மூன்று சொற்கள் பயன்படுத்தப்பெறுகின்றன. sojourtā), morality Grasslišić5 . ஒழுங்குணர்வு, படிப்பினை, நெறி முறை என்பன பொருள்கள். ethics என்பது நன்னெறி நடைமுறையொழுங்கு என்றே பொருள் தரும். அதே போல், Righteousness என்பதும் நேர்மையுணர்வு சரியான

நடைமுறை என்பனவற்றையே குறிக்கும். -

இவையே போல் வடமொழியாகிய சமசுக்கிருதத்திலும் தர்ம