பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

78


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 78

பொழிப்புரை எல்லா நிலை மக்களும் ஏற்றத்தாழ்வின்றி அணுகுவதற்கு உகந்த) எளிமையான குணத்தினை உடைய அறவாணனின் அறமுயற்சிகளை ஏற்றுப் போற்றி அவற்றுக்கு உடன்பட்டு இயங்காதவனிடத்துக் கொள்கையெனும் ) குறிக்கோள் இராது; (முன்னறிந்து செல்லும் அறிவு இராது; (மக்கள் தன்மைக்குகந்த நல்ல குணங்களும் இலவாகும்.

சில விளக்கக் குறிப்புகள்:

Í.

a.

அற முயற்சிகளைப் போற்றிக் கொள்ளாதவர் க்கு வாழ்க்கையின் குறிக்கோள், அதனை நிறைவேற்றுவதற்கான அறிவு வளர்ச்சி, மாந்தப் பிறவியின் சிறப்புகள் ஆகியவை இலவாகும் என்றார். இதன் வழி இறைமையுணர்வின் பயன் கூறினார்.

கோளில் - கோள் இல் - கொள்கையெனும் குறிக்கோள் இல்லை. இராது. - - . பொறியில் - பொறி அறிவு, இல் இல்லை - இராது. குனமில - நல்ல குணங்களும் இல்லை - இரா. எண் குணத்தான் எண் குணத்தான் என்பதற்குப் பரிமேலழகர் முதல் பாவாணர் உள்ளிட்ட உரையாசிரியர் அனைவரும் எட்டுக் குணங்களையுடைய இறைவன் என்றே பொருள் தருவர். இவை அனைத்தும் சிவனிய, அருக (சமண) மதச் சார் புடையவையே என்று வழக்கிட்டுக்

கொள்ளப்படுகின்றன. ஒருவருக்கொருவர் இவை தம் மதம்

சார்ந்தவையே என்பர்.

காலிங்கரும் இற்றை உரையாசிரியர் ஒரிருவரும்,

'எண்ணப்பட்ட நல்ல குணங்கள் என்பர். இப்பொருள் பொருந்தாது. ‘. . . . என்னை? எண் என்பது பெயர்ச் சொல்லாக வருமிடத்து இலக்கத்தையும் எட்டு என்னும் எண்ணையும் குறிக்குமே தவிர எண்ணப் பெறும் குணங்கள் என்று வினைத் தொகைப் பொருளில் வராது. அவ்வாறு வரவேண்டுமாயின் எண்ணு குணங்கள் என்றே வரும் எண் என்னும் சொல் தொடர்ந்த அனைத்துப் பண்புத் தொகை தொடர்களும் எளிமை எட்டு என்னும் பொருள்களையே தரும். இங்கும் இம் முன்னொட்டுச் சொல் எளிமைப் பொருளையே தந்தது

groño. . . . .