பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79

என்று விளக்குவார். ... -

அ - 1 -1 - அறமுதல் உணர்தல் - 1

இறைவனுக்கு எட்டுக் குணங்கள் மட்டுமே இருப்பதாகச் சொல்வது குறைவுடையது. மாந்தர்க்கு இல்லாத எத்தனையோ குணங்கள் இருப்பனவாகச் சொல்லலாம். இந்த எட்டும்கூட அவ்வகையினவே, மேலும் சிவனியரும் சமணரும் கூறும் எட்டுக் குணங்களில் வேறுபாடும் மாறுபாடும் உண்டு என்க. அவை விரிக்கில் பெருகும்.

- இனி எண் குணங்களை அறிஞர் அப்பாத்துரையார், முன்னுள்ள

எட்டுக் குறள்களிலும் கூறப்பெற்ற, 1. ஆதிபகவன் - (தமிழ் வேத உருவினன். 2. வாலறிவன் - அறிவுருவினன், 3. மலர்மிசை யேகினான் - அன்புருவினன். 4 வேண்டுதல் வேண்டாமை யிலான் அறவுருவினன். 5. இருள் சேர் இருவினையும் சேரா இறைவன் - செய்ம்மை

உருவினன். - 6. பொறிவாயில் ஐந்தவித்தான் ஆற்றல் உருவினன். 7. தனக்குவமை இல்லாதான் - இனத்தின் தனி முதல்

இலக்கெல்லையான ஒருமை உருவினன். 8. அறவாழி அந்தணன் - அருள் உருவினன். - என்று வகைப்படுத்திக் கூறுவார். அதன் பின் அவர் மேலும்

"எண் பதத்தான் 548), (99) எண் பொருள் (424, 760) ஆகிய இடங்களில் எண் என்பதை எளிமை என்ற பொருளில் திருவள்ளுவரே வழங்கியுள்ளார். இவ்வழி எண்குணத்தான் என்பது 'எளிய இயல்பினை உடையவன் அன்பர்களுக்கு எளிவந்தவன் (பத்த வச்சலன்) என்று பொருள்படுவதாகும். குறட்பாவில் திருவள்ளுவர் கருதிய முதற்பொருள் என்ற முறையில் இது சிறப்புடைய பொருளன்று; ஆனால் தொனிப் பொருள் என்ற முறையில் இஃது எண்குணத்தான் என்ற அடைமொழியால்

குறிப்பாகத் தெரிவிக்கப்படும் அழகு நயம்மிக்க கருத்தேயாகும். அத்துடன் இது பொருள் மேலே மூன்றாவது குறட்பாவில்

விதந்துரைக்கப்பட்ட அன்புருவினன் அஃதாவது மலர்மிசை ஏகினான் என்ற கருத்தை வலியுறுத்துவதாகவும் அமைந்துள்ளது”

. இவர் கருத்துகளில் இறுதியில் கூறப்பெற்ற எளிமைப் பொருள்

கருத்தே வலிவுடையது. அதிகாரத்தின் முன்னைய எட்டுக்