பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83

க0.

அ - 1 1 - அறமுதல் உணர்தல் - 1

அரியன் என்றெண்ணி அயர்வுற வேண்டா

பரிவுடை யாளர்க்குப் பொய்யலன் ஈசன்

பரிவொடு நின்று பரிசறி வானே"

- திருமந், 348

- என்று திருமூலர் முதலிய மதவியலாரும் இறைவனது எளிமைக் குணத்தைக் குறித்திருக்கின்றதும் காண்க - இனி, இவற்றுக்குக்கும் மேலும் எண் என்னும் சொல்லை நூலாசிரியரே எண் பதத்தான் (548), (99) என்றும், எண் பொருள் (424), (760) என்றும் பயன்படுத்தியுள்ள நான்கு இடங்களிலும் "எளிமைப் பொருளிலேயே கையாண்டுள்ளது. மிகப் பெரும் சான்றாகுதல் காண்க. எனவே, இது தொடர்பான குணப் போராட்டங்களும் சமயப் பூசல்களும் தவிர்ந்தன அல்லது தவிர்க்கத் தக்கன என்க. - Ꭴ

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார். 10

பொருள் கோள் முறை:

இறைவன் அடி சேராதார் பிறவிப் பெருங்கடல் நீந்தார்; (சேர்ந்தார்) நீந்துவர்.

பொழிப்புரை : (உடல், அறிவு, மனம் ஆகிய பருப்பொருள், நுண் பொருள் இயங்கியல் முதிர்வடைதலின் வழி அறமுதலின் மூலவுணர்வாகிய இறைப் பேராற்றலொடு ஒன்றிக் கலந்தவர். அடுத்தடுத்து அலைகள் போல் தோன்றும் பிறவித் தொடராகிய பெருங்கடலை நீந்திப் பிறவா நிலையாகிய கரை சேர்ந்து, உருவ, அருவச் சுழற்சியின்றி இருப்பர் மற்றையவர் அவ்வாறு நீந்திக் கரை சேராமல், பிறவிச் சுழற்சியின் வயப்பட்டே இருப்பர்

சில விளக்கக் குறிப்புகள்