பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98 அ-2-9 அடக்கம் உடைமை -13

- இத்தனை இடர்ப்பாடான கடைப்பிடிப்புகளோடும், அறவொழுக்கக் கோட்பாட்டில் திரிபடையாமலும் ஒருவர் நேர்மை உடையவராக இருந்து, அடங்கியொழுகி, உலகியலுக் கிடையில் முன்னேறி வருவதெனில், அஃது எத்துணைப் பெரிய ஆளுமை முயற்சியாக இருத்தல் வேண்டும் என்பதை அறிவினார் எண்ணிப் பார்த்து உணர்தல் வேண்டும் என்க. - அவ் வரும்பெரும் முன்னேற்றத்தைத்தான் ஆசிரியர் வியந்து, ‘அது மலையினும் மாணப் பெரிது’ என்று போற்றுகிறார் என்க. -இனித்தான் இம் முன்னேற்றத்தை எடுத்துக்காட்டுடன் பொருத்திக் காணுதலுக்கு ஒரு தேவை உண்டாகிறது. - முதற்கண், ‘மலையினும் மாணப் பெரிது’ என்னும் தொடர்க்கு மேற்சொன்ன, பாவாணரை உள்ளடக்கிய முன்னைய உரையாசிரியர்தம் பொருள் என்னவெனின், ‘மலையின் உயர்ச்சியினும் மிகப் பெரிது’ என்பதே. - இதில் பொருட்சிறப்பு என்ன என்பது நமக்குப் புலப்படுமாறு இல்லை. -இவ்வாறு பொருளில் புரைச் சொற்களையும், புனைதரு வெற்றுச் சொற்களையும் மிடைந்து கூறுதல் நூலாசிரியர் போலும் நுண்மாண் நுழைபுலம் மிக்க ஒண்மாண் புலவர்க்கு ஒப்புதலாயிருக்குமோ என்று எண்ணிப் பார்ப்பின் வருத்தமே மேலிடுகின்றது. - ஆரிய நூல்களான வேதங்களில் உள்ள ஒருசிறு சொல்லுக்கும் நூறு பொருள்களை வெளிய விரித்துப் பெருமை சாற்றும், ஆரியவியற் பூரிய புலவர்கள், இவ் வரும்பெறல் நூலுக்கு மட்டும் அரும்பொருள் காணாது வெறும்பொருள் கூறுவதன் நோக்கம், தமிழியலை மிகுதாழ்த்துவதே என நினைத்து மறுக்க வேண்டியுள்ளதென்க. - ஒரு மலையினது சிறப்புக்கு மூன்று நிலைகள் உரியவாம் என்க. அவை, வியப்பு, பெருமை, நிலைப்பு ஆகியன.

- மலை என்னும் சொல் மலைத்தல என்னும் வியப்புணர்வால் விளைந்த சொல். 
- மலையினது உயர்ச்சியும், பருமையும், கிடக்கையும், வளங்களும், நிலைப்பும் மாந்தரை மலைக்க (வியக்க) வைத்தலை யாரே மறுப்பர்? .

- இம் மலைப்பின் அடிப்படையில் தோன்றிய வியப்பும், அதன் பருமையும், கிடக்கையும், வளங்களும் காட்டும் பெருமையும், அதன் அழிவுறாத நிலைத்தல் தன்மையும் அதன் சிறப்பை நமக்குப் புலப்படுத்துகின்றன அல்லவா? - இது போலும் வியப்பையும், பெருமையையும், நிலைப்பையும் கொண்டதுதான், ‘தன் கடைப்பிடியிலிருந்து, எவ்வகையான