பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

99


திருக்குறள் மெய்ப்பொருளுரை பெருஞ்சித்திரனார் S9

ஏற்றத்தாழ்வு வந்த விடத்தும், தன் நிலையில் சிறிதும் மாறுபாடுறாமல், அறநெறியில் அடங்கியொழுகுபவனுடைய முன்னேற்றமும் என்பது நூலாசிரியரது கருத்தாம் என்க. என்னை? இனி, அவ்வுணர்வுகளைத் தனித்தனியே எடுத்துப் பொருத்திக் காண்போம். . வியப்பு - கடுமையான வெயிலுக்கும், பெரும்புயல் மழைக்கும், சீர்த்தடிக்கும் சூறாவளிக்கும் உருகாமலும், கரையாமலும், அசையாமலும் முன்னிருந்த நிலையிலேயே நிற்கின்ற ஒரு மலையைப் பார்க்கும் பொழுது ஏற்படுகின்ற வியப்பை விட, பலவாறான இல்லறவியல், உலகியல் இடர்ப்பாடுகளுக்கும் தாக்கங்களுக்கும், வாழ்வியற் கடுங் கடமைகளுக்கும், பொருளியல் விடாமுயற்சிகளுக்கும் இடையில், தாம் கடைப்பிடியாகக் கொண்ட அறநெறிக்கண் அசைவுறாது அம்மலை போன்று அடங்கியொழுகி நின்று, முன்னேறித் தோன்றுதல் மிகப் பெரும் வியப்பை அளிப்பதாகும் என்க.

பெருமை - மலையினது உருவிலும், பருமையிலும், கிடக்கையிலும், வளமையிலும், செழுமையிலும் வளமை நீரினதும் நிலத்திணையினதும்: செழுமை மாழை, மணிகளது) பெரிது விளங்கும் மலையின் பெருமையைவிட, .

உறுதியினும், உழைப்பினும், ஊக்கத்தினும், நோக்கத்தினும், அடங்கியொழுகலினும், பிறர்நலம் கருதும் அறக்கடைப்பிடியினும் சிதைவுறாது நின்று முன்னேறித் தோன்றுதல் மலையினும் மானப் பெருமை உடையதாம் என்க. என்னை? - அது, பூதவியங்கியலின் வலிமையுடையது; இது, உயிரியங்கியலின் எளிமையுடையது. எனவே மிகுந்த பொறாமை சேர்ந்ததாம் என்க. நிலைப்பு - மலை நீண்ட நெடுங்காலம் நிலைப்பது. இயற்கை

மாற்றத்தாலேயே அழிவுறுவது.

“குன்றும் வானும் கோடி யாண்டுகள்

நின்று நிலைப்பன; நீயோ அழிபவன்! - - கனிச்சாறு: இம் மலையினது நிலைப்பை விட, ‘அறத்தான் வரும் இன்பமும் புகழும், (39) வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து தெய்வத்துள் வைக்கப் பெறும் பெருமையும், (50)

அன்புற்றமர்ந்த வழக்கால் இன்புற்று எய்திய சிறப்பும், . (75) விருந்தோம்பிய வேள்விப் பயனும், (87)

இன்சொல் கூறிய அறத்தான், (93)