பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

101


திருக்குறள்-மெய்ப்பொருளுரை_பெருஞ்சித்திரனார் TO1

நிலைகளையும் கருதுதல் வேண்டுவதாயிற்று.

- இதுவரையும், இவ் வதிகார முழுமையும் அதிகாரத் தலைப்புக் கேற்ப அடக்கம்’ என்ற சொல்லையே பயன்படுத்தியவர் இவ்வோரிடத்தில்தான் பணிதல்’ என்னும் சொல்லைப் பயன்படுத்தியது கவனிக்கத்தக்கது.

- நூலாசிரியர், எல்லாத் திறத்தார்க்கும் பணிவு வேண்டியதை இந் நூலுள் பலவிடத்தும் பலவாறாகப் படைத்து மொழிதல் அறிவினார் நுண்ணிதின் அறிந்து ஒப்பு நோக்கி மகிழ்தற் பாலது.

- செல்வர்க்குப் பணிவு வேண்டும் என்பதை அவர் மானம்’ என்னும் அதிகாரத்துள்,

‘பெருக்கத்து வேண்டும் பணிதல்’ – 963 என்றும்,

- கல்வி நிலையுற்ற அறிஞர் பணிவாக நடந்து கொள்ள வேண்டும், அல்லாக்கால் அவர் கற்றறிந்தும் பேதைமை உடையவராக மதிக்கப் பெறுவர் என்பதைப் பேதைமை அதிகாரத்துள்,

‘ஒதி யுணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் பேதையின் பேதையார் இல்’ – 834

என்றும்,

பதவி, தொழில், கலை முதலிய ஈடுபாட்டு நிலைகளுள் மேம்பட்டவர்கள் எவ்வாறு பணிவோடு நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பெருமை என்னும் அதிகாரத்துள், - -

‘பணியுமாம் என்றும் பெருமை சிறுமை

அணியுமாம் தன்னை வியந்து x * - 978 என்றும்,

பதவி, அதிகாரம், அறிவுணர்வு, பண்புணர்வு கொண்டவர்கள் எவ்வாறு

பணிவாக நடந்து, தம்முடன் வேறுபட்டவர்களையும் மாறுபட்டவர்களையும் தமக்கு இயைபுடையவர்களாக - மாற்றிக் கொண்டு, தம் தம் செயற்பாடுகளைத் திறமையாகச் செய்தல் வேண்டும் என்பதைச் சான்றாண்மை அதிகாரத்துள்,

ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர் மாற்றாரை மாற்றும் படை’ 985 என்றும்,

அரசாளுமையில் உள்ள ஆட்சியாளர்கள் தம்மைப் பற்றியும் தம்முடைய

செயற்பாடுகள் பற்றியும், பிறர் திறனாய்வின் அடிப்படையிலும்,

பொதுநன்மை கருதியும், தாம் பொறுத்துக் கொள்ள வியலாதபடி