பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 அ-2-9 அடக்கம் உடைமை 13

மிகக் கடுமையாகக் கருத்துகளைச் சொன்னாலும், அவற்றை எவ்வாறு பொறுத்துக் கொண்டு, பணிவுடையவர்களாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை,

‘செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக்கீழ்த் தங்கும் உலகு” - 389 என்றும், தம் இனநலம் கருதி மக்கள் தொண்டாற்ற விரும்பும் பொதுநலத் தொண்டரும், தலைவரும், எந்த அளவில் அனைத்துத் தரத்து மக்களிடமும், தம்மைத் திறனாய்வு செய்து இகழ்ந்து அல்லது தாழ்த்திக் கூறும் பொழுதும், எவ்வாறு மிகவும் பணிவுடனும் அடக்கத்துடனும் நடந்து கொள்ளுதல், அந்த இன மேம்பாட்டிற்கு நல்ல பயன்தரும் என்பதைக் குடிமை அதிகாரத்துள்,

நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின் வேண்டுக யார்க்கும் பணிவு’ - 960 என்றும், -

நூலாசிரியர் பலபடக் கூறுவது அறிவார்வம் உள்ளவர்கள் நுணுகி

உணரத் தக்கதாகும். இனி, அவர் இவ்வளவின் அமையாது, ஆண் பெண் உறவு மனவியலிலும் நுழைந்து, காதன் மிக்க மனைவி கணவர் ஈடுபாட்டிலும், அவரவர்க்கு, அவ்வவ் விடத்து இருக்க வேண்டிய, இலங்க வேண்டிய பணிவுநுட்பங்களைக் கூறுவதும் எண்ணி வியக்கத் தக்கதும், மகிழத் தக்கதும் ஆகும். கணவனும் மனைவியும் எப்பொழுதும் எந்நிலையிலும் குறிப்பாக அவர்கள் இருவரும் கூடலில் ஈடுபடும் நேரத்திலும், ஒருவர்க்கொருவர் அன்பான சொற்களை மட்டும் பரிமாறிக் கொண்டால் போதாது, கனிவொழுகும் பணிவான மொழிகளையே பேசிக் கொள்ளுதல் வேண்டும் என்று நூலாசிரியர் கூறும் நுட்பம், அவர் பாலியலிலும், மாந்த மனவியலிலும் எவ்வாறு மிகச் சிறந்த அறிவினார் என்று உணர்த்துவதை அறிந்து போற்றுதல் தக்கதாகும். தன் அன்புக் காதல் மனைவியின் வாயிதழ் நீர் கணவற்குப் பாலொடுதேன் கலந்தது போலும் சுவை தருவதாகும் என்று கூறவருமிடத்து, ஆசிரியர், அவ்வாயும், வாயிதழும் எல்லாப் பெண்டிர்க்கும் இயல்பாய் அமைந்துள்ள அழகிய பொதுவான செவ்விய வாய் என்றும், மலரிதழ் போலும் மெல்லிய இதழென்றும் மட்டும் உணரக் கூறாது, தன் கணவனிடம் பணிவான மொழிகளைப் பேசிப் பழகிய வாயாகவும் இதழாகவும் அவை இருத்தல் வேண்டும்,