பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

105


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 105

பொழிப்புரை ஆமையானது, தனக்கு ஏதாவது ஒர் இடர் நேரும் என்று உணரும் பொழுது, தனது உடல் இயக்கத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் வகையில், தன் தலையையும், நான்கு கால்களையும் தன் முதுகினது பருத்த ஒட்டிற்குள் உள்ளிழுத்துக் கொண்டு, அடக்கித் தனக்குக் காப்பு ஏற்படுத்திக் கொள்வது போல், இல்லற வாழ்வினும், தன்னுடைய புறவுறுப்புகளாகிய மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து உணர்வுப் பொறிகளையும், அவ்வவற்றின் வழியே செல்ல விடாமல், அறிவால் அடக்கி யொழுகுதல் செய்வானாயின், அவ் வடங்குதல் தன்மை அவனது உயிரியக்கத்தினோடு பொருந்தி வலுப்பெற்று, அவ்வுயிர் மீண்டும் தொடர்ந்து எழுகின்ற பிறவிகள் தோறும் அவனுக்குக் காப்பாக நின்று உதவுதல் செய்யும்.

சில விளக்கக் குறிப்புகள் :

1. இது, ஐம்புலன்களையும் அடக்கித் தன்வயப்படுத்தி, அறிவுவழி

இயக்குவானுக்குற்ற பயன் கூறியது.

- இதுவரை, மன அடக்கத்தையும் அறிவடக்கத்தையும் கூறியவர், இதில் அவற்றின் மூலச் செயற்பாட்டிற்குரிய பொறிகள் கூடிய உடலினது அடக்கத்தைக் கூறுவார். 2. ஆமைபோல் ஒருமையுள் ஐந்து அடக்கல் ஆற்றின் ஆமை யென்னும் நீர்வாழ் உயிரி, தனக்கு பிற உயிரிகளால் ஏதாவது ஒர் இடர் நேரும் என்று உணரும் பொழுது, தனது உடலியக்கத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு ஒரு கல்லைப் போல் கிடந்து தப்பித்துக் கொள்ளும் வகையில், தன் தலையையும், நான்கு கால்களையும், தன் முதுகினது பருத்த ஒட்டிற்குள் உள்ளிழுத்துக் கொண்டு, அடக்கித் தனக்குக் காப்பு ஏற்படுத்திக் கொள்வது போல், இல்லற வாழ்வினனும், தன் மனத்தைக் கவர்ந்து உயிரை அலைக்கழிக்கும் நிகழ்வுகளின்று தன்னைக் காத்துக்கொள்ளத் தன்னுடைய புறவுறுப்புகளாகிய மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து உணர்வுப் பொறிகளையும், அவ்வவற்றின் வழியே செல்லவிடாமல், அறிவால் அடக்கி யொழுகுதல்

செய்வானாயின்.

ஐந்து பொறிகளையும் அறிவான் அடக்கி யொழுகுதலை முன்னரே,

உரனெனினும் தோட்டியான் ஒர்ஐந்தும் காப்பான் (24)

என்று கூறினார்.

‘சென்ற இடத்தால் செலவிடாது தீதுஒரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு’ - (422) என்று அறிவுடைமை அதிகாரத்தும் கூறுவார். . . .

- ஐந்தடக்கல் ஆற்றின்’ என்றது. ஐந்து பொறிகளையும் அடக்கி

யொழுகுதல்.