பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

0

அ-2-9 அடக்கம் உடைமை 13

கஉஅ. ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்

நன்றாகாது) ஆகி விடும். - f28

பொருள்கோள் முறை :

பொருள் பயன் உண்டாயின், ஒன்றானும் தீச்சொல், நன்றாகாது ஆகி விடும்.

(அல்லது ஒன்றானும் தீச்சொல் உண்டாயின் பொருட்பயன் நன்றாகாது) ஆகி விடும்.

பொழிப்புரை சொல்லப்படுகின்ற பொருள் பயனுடையதாயிருப்பினும், அதை எடுத்துச் சொல்லுகின்ற சொற்களில் ஒரே ஒரு சொல் தீச் சொல் உண்டெனினும், அப்பொருள் முழுவதும் நல்ல பயனைத் தராததாகிவிடும்.

சில விளக்கக் குறிப்புகள் :

1,

2.

3

பொருள்பயன் உண்டாயின் கூறப்படுகின்ற பொருள்

பயனுடையதாயிருப்பினும்.

உண்டாயின் உண்டாயினும், எச்சவும்மை தொக்கி நின்றது. ஒன்றானும் தீச்சொல் அவ்வாறு கூறப்பெறுகின்ற சொற்களில் ஒரே ஒரு சொல் தீய சொல்லாக இருப்பினும்

- உண்டாயின் என்னும் மேல் கருத்து முடிபை இதற்கும் பொருத்திக் கூறலாம்.

‘ஒன்றானும் தீச்சொல் உண்டாயின் என்று கொண்டு கூட்டிச் சொல்லினும் இதே பொருள் கிடைக்கும் என்க.

நன்றாகாது ஆகி விடும் . அப்பொருள் முழுவதும் நல்ல பயனைத்

தராததாகி விடும்.

ஒருவர் சொல்லுகின்ற கருத்துகள் பயனுடையனவாக இருப்பினும், அவர் அவற்றைக் கூறுகின்ற சொற்களும் நல்ல சொற்களிலேயே இருக்க வேண்டும். அவ்வாறில்லாமல் அவர் பயன்படுத்துகின்ற சொற்களில் ஒரே ஒரு சொல் தீய சொல்லாக இருப்பினும், குடம் பாலில் ஒருதுளி நஞ்சு கலந்ததைப் போலும், வாய் நிறையக் கொட்டிய நிலக்கடலையை மெல்லும் பொழுது ஒரே ஒர் ஊசைக் கடலை சொத்தைக் கடலை

இருந்துவிடின் வாய்க் கடலையை முற்றும் துப்பவேண்டி ஆவதுபோலும்,

அத்தனைக் கருத்துகளையும் அது கெடுத்துவிடும் என்க.

4. இக்குறளுக்கு உரையாசிரியர் பலரும் வேறுவேறு வகையாகக் கொண்டு

கூட்டிப் பொருள் காண்பர்.