பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

115


திருக்குறள்-மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 115

- நாவினால் சுடுவது, பழிகூறுவது, சுடுசொல் கூறுவது, இழிசொல் கூறுவது, இடர்க்கர்ச் சொல் கூறுவது, தீயசொல் கூறுவது முதலியன. - ஆறிப் போவதால் தீயினாற் சுட்டதனைப் புண் என்றும், ஆறாது கிடத்தலால் நாவினால் சுட்டதனை வடு என்றும் கூறினார் என்று விளக்கம் தருவர், பரிமேலழகர்.

- இனி, வடு என்னும் சொல், தழும்பை மட்டுமன்றிப் பழியையும் குறித்தலால் (549, 107) நாவினால் சுட்டவன்பால் நிற்கும் பழி மறையாது நிற்றலையும், ஒரு சார்பில், இது குறிக்கும், என்க.

- நாவினால் சுடுவது, புறத்தே ஆறுதல், செவியிற் பட்டு மறைதல், - சொல் சுட்டது. தம் மகன் அம்பிகாபதியின் தலையை வாங்கிய குலோத்துங்க சோழனைக் கம்பர்,

- என் நெஞ்சிற் ‘பட்டதடா நின்கொடுமை சோழாகேள் நின்குலத்தைச் கட்டதடா என்வாயிற் சொல்’ - என்று சாவித்ததும் ஆம். - 4. இது, காவாத நாவினால் கூறப்பெற்ற தீச்சொல் கூறப் பெற்றவன் நெஞ்சில் ஆறாத வடுவாயும், கூறியவன் பாங்கில் மறையாத பழியாயும் நிற்றலைக் குறித்தலால், அவற்றின் பின் வைக்கப் பெற்றது.

கங்0. கதம்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி

அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து. - 130

பொருள்கோள் முறை : - .

கதம் காத்துக் கற்று அடங்கல் ஆற்றுவான் ஆற்றின் நுழைந்து அறம் செவ்வி பார்த்திருக்கும்.

பொழிப்புரை கடுஞ்சினத்தை அடக்கிக் காத்துக் கற்பவை கற்று அமைந்து

நின்று அறத்தைக் கடைப்பிடிப்பவனது வழிக்கண் நின்று, பொதுமையறத்தின் பயன் அவனை அடையக் காலம் பார்த்திருக்கும்.

1. கதம் காத்து - கடுஞ்சினத்தை அடக்கிக் காத்து.

- கதம் கனன்று வரும் சினம்.

- காத்தல் அடக்கிக் காத்தல். 2. கற்று அடங்கல் ஆற்றுவான் - கற்பவை கற்று அமைந்து நின்று அறத்தைக்

கடைப்பிடிப்பவனது.