பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f{3

அ-2-9 அடக்கம் உடைமை 13

ஆற்றுதல் அறத்தைக் கடைப்பிடித்தல்,

கற்றலுக்கு முந்து நிலை சினத்தை அடக்கிக் காத்தலால் அதனை முன் வைத்துக் கூறினார். - ஆற்றின் நுழைந்து அவன் வழிக்கண் நின்று. .

4. அறம் செவ்வி பார்த்திருக்கும் பொதுமையறத்தின் பயன் அவை

அடையக் காலம் பார்த்திருக்கும்.

அறம் பார்த்திருக்கும் என்றது அறப்பயன் காலத்தால் வந்து சேரும் என்பதை உருவகித்துக் கூறியது.

- இதன் விளக்க விரிவை 77ஆம் குறளின் விளக்கக் குறிப்பில் காண்க. -

- செவ்வி - பொருந்திய காலம்.

‘மலரினும் மெல்லிது காமம் சிலரதன் செவ்வி தலைப்படு வார். - 289 என்னும் குறளுரையில் அதன் செவ்விய பொருளைக் காண்க - அறப்பயன் காலத்தால் வருவது. அதனை உணர்ந்த பலரும் வந்து உதவுவது. - - மற்று, பரிமேலழகரும், பரிதியாரும் பாவாணரும் உரைத்தது போல், அறக் கடவுளோ, தர்மதேவதையோ அறத்தெய்வமோ அன்று.

- உருவகம் உண்மை அன்று.

சிலர் கற்றுக் கதம்காத்து என்று நிரை மாற்றிப் பொருள் கூறுவது நிகழ்வுப் பொருத்தமன்று.

இஃது, அடக்கமுடையவரே கற்றற்கும், அறஞ்செய்வதற்கும் உரியவர்

என்பதும், அவர்க்கே அறத்தால் விளையும் பயன் கிடைக்கும் என்பதும் ஆகலின் முன்னதன் பின்னும், அதிகார ஈற்றிலும் வைத்துப் பொருள் நிறைவு செய்தது.