பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

fig அ-2-10 ஒழுக்கமுடைமை 14

ரினும் இனிய சாயல் பாரி’ - புறம்.105:7

என்றார் கபிலர்.

‘பண்பெனப் படுவது பாடறிந்து ஒழுகுதல்’

- கலி:133:6

- என்றார் நல்லந்துவனார்.

பாடறிந்து ஒழுகுதல் - பழகுவார் தன்மைக்குத் தக நடத்தல். ‘பயனும் பண்பும் பாடறிந்து ஒழுகலும் - நற்:160 எனவே, ஒழுக்கம் என்பது, நீர்மை, அளவான அடக்கம், திரண்ட குணநலம், நேர்மை, அன்புணர்வு, பிறர் தன்மைக்குத் தக நடத்தல் - முதலிய பண்புகள் கொண்டு ஒழுகுதலாயிற்று.

ஒழுக்கம் என்பதற்குப் பிறர் எவ்வாறு நம்மிடம் நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோமோ, அப்படியே பிறரிடம் நாம் நடந்து கொள்வது என்று எளிமையாக விளக்கம் கூறினார். இசுலாமிய நெறி நிறுவனர் முகமது நபிகள் அவர்கள்

ஒருவன் ஒழுக்கமாக நடக்க வேண்டுவது, உலக ஒப்புரவின் தேவை. உலகச் சமநிலை அப்பொழுதுதான் எய்துதற் கியலும். பொருளியல் சமவுடைமைக்கும் அஃதாவது நிகரமை (Socialism)க்கும் பொதுவுடைமைக்கும் (Communism)க்கும் தனிமாந்தச் சமநிலை (Personal Equality)க்கு அடிப்படையாகும். தனி மாந்தச் சமநிலை ஒழுக்கத்தின்பாற் பட்டது. .

அறிவியலும், உரிமையியலும், ஆட்சியியலும் மிகு வளர்ச்சி பெற்ற இக்காலத்தில் ஒழுக்கம் கருத்தளவில் எத்துணைச் சிறப்பாகக் கூறப் பெறினும், குமுகாயத்தில் பொருள் சமநிலை (Economical Equality)யும், சமவுரிமைப் LIrissojib (Fairness of equal rights), gy: Gujui off fanavujib (Rights of political Uning) இருந்தால்தான், தனிமாந்த ஒழுக்கம் நிலைபெறுவதாகும். இல்லெனில் சிதைவுறவே செய்யும்.

‘ஒழுக்கம் பசியின்மை ஊன்றுதொழில் கல்வி இழுக்கம் இவையிறப்ப எய்தும் வழுக்கலிலா உள்ளத் தொழுக்கம் உயர்வொழுக்கம் ஆங்கதுவும் - கள்ளத் திடறும்அக் கால்’ - உலகியல் நூறு.

எனவே, அறவியல் கடைப்பிடியாகிய ஒழுக்கவுணர்வு, அறிவியல் அரசியல், உரிமையியல் தாக்கங்களால் சிதைவுற்றுத் தோன்றும் பொழுது, குமுகாயவியல், அறவியல் அறிஞர்கள் தனிமாந்த ஒழுக்கத்தை