பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

123


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் *23

“பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுவின்றேல் மண்புக்கு மாய்வது மன்’ - 996 இதை ஒப்ப உரைத்தாரும் உளர்.

‘உடைப்பெருஞ் செல்வரும் சான்றோரும் கெட்டுப் புடைப்பெண்டிர் மக்களும் கீழும் பெருகக் கடைக்கால் தலைக்கண்ண தாகிக் குடைக்கால்போல் கீழ்மேலாய் நிற்கும் உலகு’ - நாலடி:368 ஒழுக்கந்தான் பண்புக்கு அடிப்படை ஒழுக்கத்தை அடிப்படையாகக் கொண்ட பண்புணர்வே மக்களைக் கீழ்மை உயிர்களினின்று வேறுபிரித்துக் காட்டுவது. இன்னுஞ் சொன்னால் பண்புணர்வு பறவைகள், விலங்குகளிடமும் உண்டு. ஒவ்வொரு பறவையிடமும், ஒவ்வொரு விலங்கினிடத்துங்கூட மக்கள் பண்பியல்களில் சில சிறந்திருப்பதைக் காணலாம். (அவை விரிக்கிற் பெருகும்;

பண்பு இல்லாத உயிரினம் நிலைத்திணை (பயிரினம்) ஒன்று தான். அந்நிலத்திணை உயிர்களில் மேம்பட்டு நிற்பது மரம். எனவே மக்களினத்தில் மிகச்சிறந்து மேம்பட்ட அறிவுடையாராயினும் அவரிடம் மக்களுக்குரிய பண்பொழுக்கம் இல்லையெனில், அவர் மரம் போன்றவர்தாம் என்று நூலாசிரியர் கூறும் கருத்து கூர்ந்து நோக்கத்தக்கதாம் என்க. அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர் மக்கட்பண்பு இல்லா தவர். - - 997 எனவே, மக்களைப்போல் இருப்பவர்கள் எல்லாருமே மக்களுக்குரிய உறுப்புகளைப் பெற்றிருந்தாலும், மக்களுக்கே மிகவும் சிறப்பான ஒழுக்கப் பண்பு பெற்றிருக்க வில்லையானால் மக்கள் அல்லர் விலங்குகளே என்பார் பேராசான். ‘.. . ‘உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றாம் வெறுத்தக்க பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு - - 993

என்பது, அது. .

இறுதியாக, அவர் நூற்சிறப்பைவிட, அவர் வலியுறுத்தும் மக்கட் பண்பியல் சிறப்புகள் மிகவும் பெருமைக்குரியவை. இது தோன்றிய மொழியையும் இனத்தையும் உலக நிலையில் உயர்த்துவன. மக்கட் பண்பியல் சிறப்புகளிலேயே மிகவும் தலைமை சான்றது தனிமாந்த ஒழுக்கம். இத்தகைய ஒழுக்கவுணர்வை இவரைப்போல் விரிவாகவும் நுட்பமாகவும், வலியுறுத்தியும் இன்றுவரை கூறிய அறிவாசிரியர் தமிழ் இலக்கிய, அறவிலக்கிய, சமயவிலக்கிய நூலாசிரியர்களும் சரி, உலக நூலாசிரியர்களும்கூட, வேறு எவருமே இலர் என்பது, இவர்க்கு உலகின் தனிச் சிறப்பாண்மையைத் தருவதாகும்.