பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 அ-2-10 ஒழுக்கமுடைமை 14

ஒழுக்கம் இல்லாதவனை உயிரில்லாதவன்; அவன் பிணம். பிணத்தின் மேல் எத்தனைப் பெருமைகள், சீர்மைகள் சிறப்புகள்தாம் சாற்றி என்ன பயன்? அச்சிறப்புகளும் சீர்மைகளும் பெருமைகளும் அவன் உயிரோடு உலாவும் பொழுதுதானே பொருளுடையவை. உயிரில்லாத பொழுது, அப் பிணத்தை மண்ணிலிடுவதைப் போல் அவையும் மண்ணிலிடத்தக்கவையே! எனவே ஒருவன் பெருமை யெல்லாம் உயிருள்ள பொழுதுதான்; உயிரற்ற பிணத்திற்கு அப்பெருமைகளால் என்ன பயன்?

ஒருவனுக்கு உயிர் மட்டுமன்று, உயிரைவிட மேலானது ஒழுக்கம். அவ் வொழுக்கத்தை ஒவ்வொருவரும் பேணிக் கொள்வதுதான் அவனுக்குப் பெருமை, சிறப்பு, சீர்மை எல்லாம் பிணத்துக்குப் பிணம் என்னும் இழிவு தவிரப் பெருமை, சிறப்பு, சீர்மை முதலிய எதுவும் இல்லாதது போல், ஒழுக்கமில்லாதவனுக்கும் எதுவும் இல்லை - என்று இவர் கூறும் கருத்திற் கிணையான கருத்து உலகில் வேறு எங்குமே இல்லை என்பதை உறுதியாகக் கூறலாம். அவை இவை,

‘ஒருமை மகளிரே போலப் பெருமையும் தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு’ - 974 ‘ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் . உயிரினும் ஒம்பப் படும்’ - #31 இத்தனைச் சிறப்புடைய இவ்வதிகாரத்திற்கு முன்னுரை கூற வந்த மணக்குடவர் ஒழுக்கம் உடைமை'யாவது, தத்தம் குலத்திற்கும், இல்லறத்திற்கும் ஏற்ற ஒழுக்கமுடையாராதல் என்று கூறுவது ஆரியவியலை வலியுறுத்திய வஞ்சகக் கூற்றாகும்.

இனி, பரிமேலழகரோ அதன்மேலும் ஒருபடி சென்று, அஃதாவது, தத்தம் வருணத்திற்கும் நிலைக்கும் ஒதப்பட்ட ஒழுக்கத்தினை உடையாராதல் என்று, வருணாச்சிரம (அ) தர்மத்தையே ஒழுக்கமாகக் கூறுதல் அடாததும், அவரது அறிவுக்கு இழுக்கானதும் ஆகும். -

இருவர்தங் கருத்துகளும் புரையும் புன்மையும் சான்றவை என்று கூறிப் புறம் விடுக்க

கா.க. ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் :

உயிரினும் ஒம்பப் படும். - 131

பொருள்கோள் முறை : இயல்பு.