பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 அ-2-10 ஒழுக்கமுடைமை-14

‘ஐந்தவித்தான் ஆற்றல்’ ~ 25

என்பதானும்,

‘சென்ற இடத்தால் செலவிடாது தீதொரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு’ - 422

என்பதானும் அறிந்துணர்க.

- பரிந்து என்பதற்கு மணக்குடவரும், பரிமேலழகரும், பாவாணரும் பிறரும் வருந்தி என்றே பொருள் தந்தனர். அதுவும் ஒருவகையில் பொருந்துவதே எனினும், அவ் வருத்தம் முயற்சியால் வருவதன்றிப் பிறவற்றால் வருவதன்று. எனவே முயற்சியான் வருந்தி என்பதே முழுப் பொருளாகும்.

முயற்சி என்பது, அம் மனத்தினதும், அறிவினதும், உடலினதும் ஆன ஒழுக்க நடைமுறைகளைக் கடைப்பிடித்து ஒழுகுகின்ற பொழுது, அவை கண், காது, மூக்கு, வாய், மெய் ஆகிய புலன்களின்வழி அசைவுறுவன வாகும். என்னை? - . .

- ஒழுக்கம் என்பதில் பெண்வழிச் செல்லா ஒழுக்கமே தலையாயது என்றுணர்க. ஏனெனில் அதுவே மெய்வழி ஒழுக்கம். எனினும் அதுவே மனத்தையும் அறிவையும் மயங்கடிப்பது; மழுங்கடிப்பது. முதலிற் கண்ணையும் பின்னர் கருத்தையும் கவர்வது அதுதான். அஃதியற்கை இயங்கியலும் மனவியலும், அறிவியலும், உடலியலும், பாலியலும் இணைந்த உணர்வு அது. எனவே, அதைத் தடுத்து நிறுத்துவது மனத்துறவு கொண்டார்க்கே அரிதென்க. அறிவை மட்டுமின்றி வீரத்தையும் அடிமைகொள்வது, அது. ஆண்மைக்கே வெல்விளியாக (சவாலாக அமைவது அது. உலகோர் கண்களுக்கு உடனடியாக உறுத்துவதும் அதுவே ஆகும். எனவே, அப் பெண்னொழுக்கமே பேரொழுக்கம் என்க.

கண்விழி, ஒருத்தியின் பெண்மை யழகைக் கண்டவிடத்து, மனம் அதன்வழிச் செல்லுவது இயல்பு: அக்கால் அறிவால் அதனை அடக்கி மேற்செல்வது கடினம். இனி, அறிவும் அதன்வழிச் செல்லுமிடத்து அதைத் தடுத்து நிறுத்துதல் மிகவும் கடினம். ‘மணிமேகலையின் அழகைச் சாத்தனார் வண்ணிக்குமிடத்து, அவளை,

ஆடவர் கண்டால் அகறலும் உண்டோ -

பேடியர் அன்றோ பெற்றியின் நின்றிடின்’

- மணிமேகலை

argri irrrr.