பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

129


திருக்குறள்-மெய்ப்பொருளுரை_பெருஞ்சித்திரனார் *29

. காமத்தையும், காதலையும், ஆண்பெண் ஈடுபாடுகளையும் முன் வைத்தே உலக இலக்கியங்கள் எண்பது விழுக்காடு பேசும். தமிழ் இலக்கியங்களும் இதற்கு நெறி (விதி விலக்கில்லை.

. காமத்தையும் அதன் நுண்ணிய தன்மையையும் முன்வைத்து

இந்நூலுளும் நிறையப்பேசப் பெறுகின்றன.

‘மலரினும் மெல்லிது காமம்’ - 1289

என்பார் ஆசிரியர். இனி, இதை மட்டும் கூறாமல்,

சிலர் அதன் செவ்வி தலைப்படுவார் என்று கூறும் பின் பகுதியில், காம நூலுள் பெரும்பாலும் தெரிவிக்கப் பெறாத, ஆனால் மிகவுண்மையான செய்தியை ஆசிரியர் தெரிவிப்பது அவரின் உடலியல், பாலியல் பேரறிவையே காட்டும். (விளக்கம் ஆண்டுக் காண்க).

தமிழிலக்கியங்களுள் காமச்செறிவான நூல்களும் பலவுள. கற்றறிந்தார் ஏத்தும் கலித்தொகையில் பலபகுதிகளில் காமச் செறிவுண்டு. காமம் காதல் இரண்டு சொற்களும் உடலியலையும் உளவியலையும் அடிப்படையாகக் கொண்டு குறிக்கப் பெறுவனவேனும், காமம் இல்லாத காதல் வாழ்வியலுக்குப் பயன்படுவதில்லை. காதல் இல்லாத காமம் உண்டு. ஆனால் காமம் இல்லாத காதல் இல்லை; இருந்தாலும் பூவாத செடி போல் சிறப்புத் தருவதில்லை.

- என்றாலும் உலகில் எல்லாரும் காமத்தை வெளிப்படையாகப் பேசுவதில்லை. ஆனால் எல்லாருமே அதை நிறைய நினைக்கின்றனர். வாய்ப்பும் சூழலும் இருந்தால் ஒழுக்கத்தை அவ்வகையில் தவற விடுபவர் இருபாலரிலும் பெரும்பாலார். எனவேதான் மறைமுக ஒழுக்கக் கேடுகள் என்றென்றும் நிகழ்ந்து கொண்டிருப்பதாகக் குமுகவியல் அறிஞர்கள் கருதுகின்றனர். பாலியல் அறிஞர்கள் அதனினும் மேலாக மதிப்பிட்டுக் காட்டுகின்றனர். உலகியல் நடைமுறை நிகழ்வுகளும் அதை உறுதிப்படுத்துகின்றன. மாந்தக் குற்றங்களும் பெரும்பாலும் அதை யொட்டியே நடைபெறுகின்றனவாகக் கூறலாம். உலகில் முதன்முதலாக நடந்த குற்றமும் பெண்ணை முன்னிலைப் படுத்தித்தான் நடந்திருத்தல் வேண்டும். அஃது, ஒரு பெண்ணை அவள் விருப்பமில்லாமல் ஓர் ஆண் தொட்டது. துய்த்ததாகத்தான் இருந்திருக்க முடியும். அதிலிருந்தே படிப்படியாக எல்லா வகைக் குற்றங்களும் உருவாகி வளர்ந்திருத்தல் வேண்டும்.

இன்றுங்கூட, உலகெங்கணும் மாந்தர் செய்யும் அனைத்துக் குற்றங்களுக்குமான அடிப்படை ஒரு பெண்ணிடந்தான் தோன்றுகிறது.