பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 அ-2-10 ஒழுக்கமுடைமை 14

எனவேதான் பரிந்து ஒம்பிக் காக்க’ என்று மிகமுயன்று, ஒழுக்கத்தைப் பேணி, அதுமட்டும் போதாது, அதை நிலையாகவும் காத்துக் கொள்ளுக என்று அழுத்தம் கூறி அறிவுறுத்துவார். மேலும், அத்துடன் அவர் நில்லாது, தெரிந்து ஒம்பித் தேரினும் அஃதே துணை என்று உலக வழக்கியலோடு பொருத்திக் காட்டி, அளவையியல் (தருக்கவியல் முடிபோடு தெளிவுறக் கூறுகிறார். - எனவே பரிந்து என்பதற்கு வருந்தி என்னும் பொருளைவிட

‘மிகமுயன்று என்னும் பொருளே மிகப் பொருந்துவதாம் என்க.

இனி, எல்லா ஒழுக்க நிலைகளும், காம ஒழுக்கத்தையே அடிப்படையாகக் கொண்டுள்ளதை துண்ணோக்கிப் பார்க்கின்’ உணர்தற் கியலும்

வீரங்கூடக் காமத்தை அஃதாவது காதலை - அடிப்படையாகக் கொண்டதே என்பதை உலக இலக்கியங்கள் அனைத்துமே கூறும். காதல் என்பது இளமை வரம்பிட்ட உணர்வாகவும் காமம் என்பது பாலுணர்வு வரம்பிட்ட உணர்வாகவும் இருப்பதை உணர்க. ‘காமம் வீரத்தையும் அடிப்படுக்கும் வலிமை சான்றது.

ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள் நண்ணாரும் உட்குமென் பீடு’ - 1088 என்பதில், காதலின் அஃதாவது காமவுணர்வின் முன் வீரம் உடைந்து

சிதறுவதை ஆசிரியர் கூறுவது சிந்திக்கத்தக்கது. காமவுணர்வு பற்றி . அதன் வலிமையும் கவர்ச்சியும் பற்றி - ஆசிரியர்

கருத்துகள் மிகவும் வலிவும் பொலிவும் சான்றன.

‘காமக் கடல்’ - 1 164 ‘காமக் கடும்புனல் நீந்திக் கரை காணேன் - 1167 ‘உள்ளினும் காமம் இனிது - 120 1 ‘இனிதே காண் காமம்’ - 1202 காம நோய் (1280) அல்லல் நோய்’ - 1301 ‘மறப்பேன் மன்காமத்தை’ - 1253 ‘உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் - - கள்ளுக்கில் காமத்திற் குண்டு - 1281 ‘காமம் விடு; ஒன்றோ நாண்விடு’ - 1247 .

- எனப் பெறுபவை காமத்தின் வலிவைக் காட்டுவனவாம். கட்குடியினும்

காமம் வலிவானது.