பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

147


திருக்குறள் மெய்ப்பொருளுரை பெருஞ்சித்திரனார் 147

போல்வாரைத் தெருவின்கண் நடமாட விட்டதே தவறு; அதற்கு அரசனே பொறுப்புடையவன்; அத்தகைய பெண்டிர் தெருவின்கண் விடப்பெறுங்கால், மத யானை ஒன்று நீர்நிலைக்கு அழைத்துச் செல்லப் பெறுகையில், எல்லாரும் ஒடி ஒளிந்து கொள்ளுங்கள் என்று பறையறைந்து முன்னறிவிப்பதுபோல், இவளன்னோர் வருகைக்கும் பறையறைந்து அல்லாமல் செல்லற்க என்று அறிவியாமற் போன அரசனே குற்றமுடையவன்’ என்று குற்றஞ்சாட்டுதல் ஒரு பாடலின் கண் கூறப்பெறுகிறது. அஃது இது:

பேதுற்றாய் போலப் பிறர்எவ்வம் நீஅறிவாய், யாது ஒன்றும் வாய்வாளாது இறந்தீவாய்! கேள் இனி, நீயும் தவறுஇலை; நின்னைப் புறங்கடைப் போதர விட்ட நுமரும், தவறுஇலர்; நிறையழி கொல்யானை நீர்க்கு விட்டாங்கு, பறை அறைந்தல்லது செல்லற்க’ என்னா இறையே தவறுடையான் கலி:56 இனி, இன்ன பாடல்கள் நிறையவுள.

இங்குக் காட்டப்பெற்ற வண்ணனைப் பாடலடிகள் அனைத்தும் கடைக்கழகக் கால இலக்கியங்களிலிருந்தே எடுக்கப் பெற்றவை. இவையன்றி, இடைக்கால, பிற்கால, இக்கால இலக்கியங்களுள், அவை வரவர வலிந்தும் பொலிந்தும், இன்னும் பலபடியாக மிகுந்தும், வெளிப்படையாகவும் கூறப்பெற்றுள்ளன; கூறவும் பெறுகின்றன. அவற்றை அவ்வவ் விடங்களுள் கண்டு கொள்க.

இனி, இக்காலத்தில் இவ்வாண்பெண் ஈடுபாட்டு நிலை கழகக் கால இலக்கியங்களைவிட, பன்னூறு மடங்கு தாறுமாறாக வளர்ந்தும் இழிந்தும் நிற்கின்றதை அறிஞர்கள் சிந்திக்க வேண்டும். அவற்றுள் ஒருசோற்று ஒருபதமாகவும், பொது மக்களுடன் மிகுதொடர்புடைய திரைக்கலையில் வருவனவற்றுள்ளேயே சிறந்த இசைமேதை பாபநாசம் சிவன் என்னும் இசைப்புலவரால் எழுதப் பெற்றதாகவும் உள்ள இரண்டு இசைபாடற் பகுதிகள் இங்கு தரப்பெறுகின்றன. அவை தூய காதலுணர்வு சான்றனவெனினும், அவை மறவுணர்வையும் தாண்டி எவ்வாறு மேலோங்கி நிற்கின்றன என்பதைக் கவனிக்கவும்.

உலகினில் இன்பம் வேறுண்டோ?.

மலரயன் படைப்பில் ஆண்ொ குலவி மகிழுமொரு கலவி இன்பமல்லது