பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148

அ-210 ஒழுக்கமுடைமை 14




பிரம்மன் நாவில் கொண்டான்;
பெருமாள் மார்பில் கொண்டான்; -
அரன்மெய்ப் பாதிகொண்டான்; பேசவாயுண்டோ?

‘சந்திர சூரியர் போங்கதி மாறினும்
விழினும் நமக்கென்ன?
இந்த இன்பமே சொந்தமதானால்
வானுலகும் வேண்டேன்’

- இவை, ஈண்டு, இவ்வகையில் ஓரளவு விரிவாகவும் செறிவாகவும் காட்டப் பெறுவதன் நோக்கம் என்னெனில், மக்கள், எப் பருவத்தினராகவும், எத்திறத்தினராகவும், எம்மதத்தினராகவும், எவ்வொழுக்கத்தினராகவும் இருப்பினும், வேறு எந்த வுணர்வினும் காமவுணர்வு அவர்களிடம் இயற்கையாகவே அவர்களின் மனத்திலும், அறிவிலும், உடலிலும் நிறைந்தியல்வதும், அதனை நீக்கவோ, குறைக்கவோ, செயல்வழிப் படுத்தவோ இயலாமல் நெருடல் மனத்தினராகவும் வருடல் அறிவினராகவும், வாய்ப்பிருப்பின் திருடல் உணர்வினராகவும் இருப்பதையும், அவர்கள் அத்தகைய இயல்புணர்வை மீறி, ஒழுங்கு காப்பது மிகு கடினமாகவும், மீறிய முயல்வினதாகவும் உள்ளதென்பதை உணர்த்துவான் வேண்டியே என்க

நூலாசிரியர் போலும் வாலறிவுடையோருங்கூட இவ்வுணர்வை அடையாளம் கண்டு காட்டியிருப்பது அறிதற்பாலதாகும்.

- உலகம் காமத்தில் தொடங்குகின்றது. காமத்தில் நடக்கின்றது; காமத்தில் முடிவடைகிறது. உலகோரை மிகுதியும் வருத்துவது, வறுமையைவிடக் காமமே என்றால் தவறில்லை. -

இனி, காமம் தவிர்க்கவியலாத இயல்புணர்வு என்பதால், அதனை அறிவு நூலாசிரியர்களும், அறநூலாசிரியர்களும், மத நூலாசிரியர்களும், மருத்துவ நூலாசிரியர்களும், ஒருமித்து, அம் மீதுறு உணர்வைக் கட்டுப்படுத்தி முறைவழிப்படி நிறை கூறினர்; தொடர்ந்து கூறியும் வருகின்றனர். .

- ஒழுக்கம் தன்னைத் தான் கொண்டு ஒழுகுவது என்றும், அப் பொழுதுதான் ஒருவன் பெருமைக்குரிய செயல்களைச் செய்தற்கியலும் என்றும் வலியுறுத்துவார். . அறிவாசிரியரும். .