பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

149


‘ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு’ - 974
பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்
நானாக நாணுத் தரும்’ - 902
எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும்
பெண்சேர்ந்தார் பேதைமை இல்’ – 910.
வினைவிழைவார் வேண்டாப் பொருளும் அது - 901

என்றெல்லாம் அவர் தெளிவுறுத்திக் கூறும் கூற்றுகள் கவனிக்கத் தக்கன.

- எனவே, பரிந்து என்பதற்கு மிகமுயன்று என்று முதற்பொருளும், தன் நெஞ்சையும் அறிவையும் உடலை வருத்தியேனும் என்று துணைப் பொருளும் கூறி, அச் சொல்லின் பொருள் ஆழத்தையும் உணர்வாழத்தையும் உணர்க.

- 3. தெரிந்து ஒம்பித் தேரினும் அஃதே துணை ஒருவற்கு வேண்டிய அனைத்து நிலைகளையும் அவற்றின் தேவைகளையும், (பலவாறு ஆராய்ந்து உணர்ந்து, அவற்றுள் சிறந்த ஒன்றைச் சீர்தூக்கித் தேர்ந்தாலும் அவ் வொழுக்கமே அவனைக் காக்கின்ற துணையாக உள்ளது. - இவ்வடியில் ஆசிரியர் பயன்படுத்திய சொற்கள் மிக எளியவாக இருப்பினும் அவை மிகவும் கூரியவை. . -

தெரிந்து என்பதற்குக் கல்வி வழியாகவும் கேள்வி வழியாகவும் மக்களின் அனைத்துத் தேவைக் கூறுகளையும், ஆராய்ந்து உணர்ந்து தெளிந்து - எனப் பொருள் பெருகுதலை அறிதல் வேண்டும்.

- வெறுமே தேரினும் என்னாது ‘ஓம்பித் தேரினும் என்றது, சீர் தூக்கிப் பார்த்துத் தேரினும் என்று பொருள் தரவேண்டி என்க.

-ஒம்புதல் என்பதற்குச் சீர்தூக்கி என்னும் பொருளும் உண்டு சீர்தூக்கி, அவ் வேண்டுதல் உணர்வுகளின் நன்மை தீமைகளை நடுவுநிலையாகச் சிந்தித்துத் தேரினும் என்று பொருள் பெருகுதல் உணர்க.

அஃது துணை என்றது. அது மற்று வேறு எந்தக் கடைப்பிடியும் இல்லாது, அது வொன்றே ஒருவரின் அனைத்து முயல்வுகளுக்கும் துணையாக நிற்பது எனல்வேண்டி ஏகாரம் தேற்றம்

இழுக்கத்தின் மிக்க இழிவில்லை; இல்லை
ஒழுக்கத்தின் மிக்க உயர்வு’ : பழமொழி 64

என்றார் பிறரும்.