பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 அ-2-10 ஒழுக்கமுடைமை 14 என்னும் சிறப்புத் தன்மைக்கு உரியர் ஆகாமல், விலங்குகள் போல் வாழத் தொடங்கி விடுவர் என்பார், என்க. என்னை?

‘ஊண்உடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல

நாண்உடைமை மாந்தர் சிறப்பு’ - 10 12

உறுப்புஒத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு’ - 993 அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர் மக்கட்பண்பு இல்லா தவர்’ - 997 தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர் நிலையின் இழிந்தக் கடை” - 964

என்றவாறு, மக்களின் ஒழுக்கம் கெடின், அவர்கள் விலங்குகள் போல் கீழ்மை நிலைக்கும், பண்பாடும் நாகரிகமும் எய்தாக் காட்டு விலங்காண்டி (காட்டு மிருகாண்டி - காட்டு மிராண்டி நிலைக்கும், மரம் போல் ஓரறிவுயிர்த் தன்மைக்கும், இன்னும் கீழான மயிர் போலும் இழிவான பொருள் தன்மைக்கும் இணையாக மதிக்கப் பெறுவர் என்பார் ஆகலின். - இந்நிலைகள் படிப்படியான கீழ்மை நிலைகளைக் காட்டுவன என்க. - பண்பு, நாகரிகச் சிறப்புக் கூறுகளே மக்கள் என்னும் ஆறறி உயிர்நிலைக்கு ஏற்றவை என்பது அறிஞர்களின் ஒத்திணைந்த கருத்து. - அவை, குடும்ப அமைவு நிலை, குடியமைவு நிலை, குமுகாய அமைவு நிலை, ஆட்சியமைவு நிலை, பொருள் பகிர்வு நிலை, அறமுறை நிை - முதலிய நாகரிக நிலைகளும், - - மொழி வளர்ச்சி, இலக்கிய இலக்கண ஆக்கம், கலை, கல்வி, பொதுநலம்

அறவுணர்வு முதலிய அறிவு நிலைகளும், - அன்புடைமை, விருந்தோம்பல், நன்றியறிவு, நடுவுநிலைமை, ஒழுக்கமுடைமை, பண்புடைமை, ஈகை, ஒப்புரவறிவு, வாய்மை,

மானமுடைமை, நாணமுடைமை முதலிய பண்பியல் நிலைகளுமாம் என்க. -. - ... -

வளாக - “ . . . . .

- பண்பாடு, பண்பியல் என்பது அகக் கூறுகளின் வளர்ச்சி.