பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$54

அ-2-10 ஒழுக்கமுடைமை 14

- இதற்கு உரையெழுதுகையில், மனக்குடவர்.

ஒருவன் இழிந்த குலத்தானாயினும் ஒழுக்கமுடையவனாக, உயர் குலத்தானாம்; அதனைத் தப்பி ஒழுகுவனாயின், உயர் குலத்தனாயினும் இழிகுலத்தானாயே விடும் என்று பொழிப்புரை கூறி, இது குலம் கெடும் என்றது என்று விளக்கமும் கூறுவார்.

இவர் கருத்து உலகியல் நடைமுறைக்கு ஒத்து வராதது. என்னை? உயர்குலத்துப் பிறந்தவர்கள் எத்தனையோ பெயர்கள் ஒழுக்கம் தவறுதல் உடையவர்களாயிருப்பது வெளிப்படை. ஆனால் அவரெல்லாரையும் எவரும் தாழ்ந்த குலத்தினராகக் கீழிறக்கி விடுவதில்லை. அதேபோல், எத்தனையோ பெயர்கள் கீழ்க்குலத்தவர்கள் ஒழுக்க நெறியுடையவர்களாக இருப்பினும் அவரை உலகம் அவர் கூறும் உயர் குலத்தவராக மதிப்பிட்டு விடுவதில்லை. எனவே, இது வெறும் கண்துடைப்புக் கருத்தே, இதற்கு மணக்குடவர் காலத்திலும் சரி, அவர்க்குப் பின்னும் சரி வரலாற்றுச் சான்றுகள் இல்லை. சமய வரலாற்றில் ஒருசிலர் அவ்வாறு கருதப் பெற்றதாக வரலாற்றில் எழுதிவைத்த செய்திகளும் புனைவு கலந்த செய்திகளே. அவற்றிலுங்கூட, அச்சமயக் குரவர்கள் சிலர் உயர்வினராகக் கருதப்பெற்றதும், அவர்தம் இறுதியடையும் பொழுதே ! அப்பொழுதுங்கூட அவர்கள் இன்றுவரை உயர்குலத்தினராகச்

சொல்லப் பெற்றதும் இல்லை; மதிக்கப்பெற்றதும் இல்லை. வரலாற்றில்

என்றும் அவர்கள் இழிகுலத்தவராகவேதாம் கூறப்பெறுகின்றனர்;

அல்லது மதிக்கப்பெறுகின்றனர். -

கண்ணப்பன் வேட்டுவ குலத்தினராகவும் திருநீலகண்ட யாழ்ப்பாணன் குயவர் குலத்தினராகவும், நந்தன் பறைக் குலத்தினனாகவுமேதாம் இண்றும் குறிப்பிடப் பெறுகின்றனர். அவர்கள் உயர்குலத்து ஆரியப் பார்ப்பனர்களாக என்றும் கொள்ளப் பெற்றதும் இல்லை; மதிக்கப் பெறுவதும் இல்லை. அவர்கள் உருவங்களைக் கல்வடிவங்களாக்கிக் கோயிலில் வைத்திருப்பதும், அவர்களை இறைவன் துறக்கவுலகத்தில் தன் அடிகளில் இணைத்துக் கொண்டான் என்று கதைகள் படிப்பதும், மதக் கவர்ச்சிக்கும், மத விளம்பரங்கட்கும், மக்களை மேலும் மேலும் அம்மதங்களில் சேர்ப்பதற்கும் ஆன சூழ்ச்சிகளே. அவை நாடகக் கதையியல் உத்திகளே என்க. - i.

இனி மணக்குடவரின் இறுதி விளக்கமான இது குலம் கெடும்.

என்பது, ஆரியவியலாரின் அல்லது ஆரியப் பார்ப்பனரின் நிறப்பகுப்பு. பிறவிப் பகுப்பு என்னும் வர்ணாச்சிரமக் கொள்கையை ஏற்றுக் கொள்வதும், நிலைப்படுத்துவதுமான ஒரு மறைமுக நடவடிக்கையே என்க. இத்திருக்குறளில் இவ்வகையான கருத்து|களுக்கு என்றும் எங்கும்