பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

155


திருக்குறள் மெய்ப்பொருளுரை பெருஞ்சித்திரனார் 5

இடமில்லை என்றுகூறிப் புறந்தள்ளுக.

இனி, இவரையடுத்த பரிமேலழகரும், தம் உரைநூலுள், இவர் கருத்தை

இன்னும் மெருகேற்றியும், வெளிப்படையாகவும்,

‘எல்லார்க்கும் தத்தம் வருணத்திற்கேற்ற ஒழுக்கமுடைமை குலனுடைமையாம்; அவ் வொழுக்கத்தில் தவறுதல், அவ் வருணத்தில் தாழ்ந்த வருணமாய் விடும் என்று உரை கூறி,

‘பிறந்த வருணத்துள் இழிந்த குலத்தாராயினும் ஒழுக்கம் உடையவராக உயர்குலத்தராவர் ஆகலின் குடிமையாம் என்றும், உயர்ந்த வருணத்துப் பிறந்தாராயினும் ஒழுக்கத்தில் தவறத் தாழ்ந்த வருணத்தராவர் ஆகலின், இழிந்த பிறப்பாய் விடும் என்றும் கூறினார். உள்வழிப்படும் குணத்தினும் இல் வழிப்படும் குற்றம் பெரிதென்றவாறு’ என்று விளக்கமும் கூறுகிறார்.

இவருரை ஒழுக்கத்திற்கே இழுக்கம் கற்பிப்பதாகும். திருக்குறள் போலும் தமிழியல் அறநூலுக்கு உரையெழுதும் அறிவையும் வாய்ப்பையும் பெருமையும் பெற்றிருந்தும் இவர் குலப் பிரிவின் கொடுங்கடைப்பிடியான வருணாச்சிரமக் கொள்கையையும் பிறவிக் கொள்கையையும் விடாமல் மனத்தானும் அறிவானும் செயலானும்

பற்றியிருப்பது அவரின் மதமூட நம்பிக்கையே தெளிவாகக் காட்டுகிறது என்க. -

இவருக்கும் மணக்குடவர்க்குக் கூறிய மறுப்புரையே பொருந்தும்

போதும் என்க.

இவர்களினின்று நாம் பெறுவது, இவரனையர் மூட மதத் தழும்பு, இவ் வாரிய மதமான வேதமதம் இருக்கும் வரை அழியாது என்பதும், திருக்குறள் போலும் தமிழியற் கொடுமுடி நூலுங்கூட, இவர் மதவழித்தாயது என்று கூறித் தமிழினத்தினார் அனைவரையும் இறுதிவரைத் தம் மத அடிமையராக வைத்திருப்பதுமே, இவர்களின் அறிவு, ஒழுக்கம், கடைப்பிடி, செயற்பாடு, மூச்சு வாழ்க்கை முதலியவாம் என்று உறுதியாக உணர்ந்து கொள்ளுவதுதான் என்க.

இஃது ஒழுக்கம் மக்களின் வாழ்வியலுக்கு எத்துணை இன்றியமையாதது என்னும் கருத்தை முந்தைய குறளுக்கு விளக்கமாகக் கூறுவதால் அதன்

பின்னர் வைக்கப் பெற்ந்து, என்க.