பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 அ-2-10 ஒழுக்கமுடைமை 14

கற்றலுக்கும் மேலான குலச்சிறப்பு உடையவனாகத் தன்னைக் கருதிக் கொண்டிருப்பவன் ஆரியப் பார்ப்பான் ஒருவனே. அதுவும் அக்கற்றலையும் ஒத்து வேத மந்திரம்) என்று கூறித் தான் கூறுவது பார்ப்பானையே என்று உறுதிப்படுத்துவார். எனவே அவனைக் குறித்ததே இக்கூற்று. அதனை எந்நோக்கம் கொண்டும் மூடி மறைக்கத் தேவையில்லை, என்க. நூலாசிரியர் பார்ப்பார் என்று பன்மையில் ஒரு சொல்லையும் இந்நூலுள் பயன்படுத்தியுள்ளார் (285). அங்கு அது, பார்ப்பவர், காண்பவர் என்னும் பொருளைக் குறிக்கும். . ஆனால் இங்கு அவர் பார்ப்பான் என்று ஒருமைப் படுத்திச் சொன்னது, அக்குலமுடையானையே. அவனே குலத்தால் அஃதாவது பிறப்பால் பெருமை கருதுபவன். நூல் கற்பார் எவரும் பிறப்பால் பெருமை கொள்வதில்லை. பிறப்பு, ஒழுக்கம் குன்றக் கெடும் என்னும் தொடரில் பிறப்பு என்பதே எழுவாய், பிறப்பு என்பதற்குக் குடிச்சிறப்பு என்று பொருள் கொண்டு இடர்ப்படத் தேவையில்லை என்க. ஒத்தை மறந்தால் கற்றுக் கொள்ளல் இயலும், ஆனால் ஒழுக்கத்தை மறந்தால் பெருமையாகக் கருதிக் கொண்டுள்ள பிறப்பு என்பதால்வரும் பிறப்பினால் வரும் - சிறப்பு கெடும் என்று ஆசிரியர் கூறுவது, அவ்வாறு பிறப்பினால் சிறப்புக் கருதும் குடியை மட்டுமே குறிக்கும். எல்லாக் குடியையும் அது குறிக்காது. அவ்வாறு பிறப்பினால் சிறப்புக் கொள்ளும் கருதும் குடி பார்ப்பனக் குடியே என்பதைத்தான் பொருளாகக் கருதுதல் வேண்டும் என்பதற்காகவே, முதலில் கூறிய கருத்தடியில் பார்ப்பான் என்னும் சொல்லைச் சேர்த்தார். அதுவும் ஒருமையில் கூறினார். -

இச்சொல்லுக்குப் பார்ப்பனர்களான மணக்குடவரும் காலிங்கரும் பரிமேலழகருமே, பார்ப்பான் என்று தாங்களும் திருப்பியெழுதக் கையும் மனமும் கூசி, பிராமணன்’ என்றும், அந்தணன் என்றும், உரை கூறியிருக்க, அறிஞர் கா.சு, போன்றவர்கள் ஏன் அதை மூடிமறைத்தல் வேண்டும் என்பது விளங்கவில்லை. -

இவர்கள் இவ்வாறு செய்தாலும், பிறப்பால் குலப் பெருமை கருதும் பார்ப்பன உரையாசிரியர்களே அதற்கு நாணாமல் பொருள் கொண்டிருப்பது, அக்கருத்து உண்மையாம் என்பதால் என்க.

3. இது, முன்னர்க் கூறிய ‘ஒழுக்கம் உடைமை குடிமை என்னும்