பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 அ-2-10 ஒழுக்கமுடைமை 14

கேடு - பொருள்கேடும், உடல்கேடும், இழிவாலும் பழியாலும் ஏற்படும்

மன உலைவும், மானக்கேடும்.

2. ஒழுக்கத்தின் ஒல்கார் - தாம் கடைப்பிடித்து ஒழுகும் தன்னொழுக்கத்தில்

குறைவு படார்.

ஒல்குவது குறுகுவது; குறைவு படுவது.

3. இஃது, ஒழுக்கமில்லாதவர்க்கு வாழ்வியல் மேம்பாடு இல்லை என்பதுடன், இழுக்கும் ஏதங்களும் வேறு வரும் என்றதால், அதன் பின்னர் வைக்கப்பெற்றது.

கங்எ. ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்

எய்துவர் எய்தாப் பழி - 137

பொருள்கோன் முறை :

ஒழுக்கத்தின் மேன்மை எய்துவர் இழுக்கத்தின் எய்தாப்பழி எய்துவர்.

பொழிப்புரை : எவரும் ஒழுக்கத்தினால் மேன்மேல் பெருமையை பெறுவர்;

ஒழுக்கம் தவிர்தலால் இதுவரை அடையாதனவும், அடாதனவுமான பழிகளை அடைவர்.

சில விளக்கக் குறிப்புகள் :

1. ஒழுக்கத்தின் மேன்மை எய்துவர் - எவரும் ஒழுக்கத்தினால் மேன்

மேலும் பெருமையே பெறுவர்.

மேன்மை - மேன்மேலும் பெருமைக்குரிய நிலை; மேலாம் நிலை

பத்வி, செல்வம், அதிகாரம் முதலியவற்றால் ஒழுக்கம் உடையவர் தகுதி மதிக்கப்பெற்று, மேலும் மேலும் சிறப்பும் பெருமையுமே பெறுவர். 2. இழுக்கத்தின் எய்தாப் பழி எய்துவர் - ஒழுக்கம் தவறுதலால் இதுவரை

அடையாததும், அடாததுமான பழிகளை அடைவர்.

இழுக்கம் - ஒழுக்கம் இழுக்கியதால் இழுக்கம் ஆயிற்று.

இழுக்குதல் - தவறுதல்.