பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

167


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 7

எய்தாப்பழி - இதுவரை அடையாதபழி அடாத பழி.

- பொய் கூறுவது, திருடுவது, பிறர்க்குக்

கேடு செய்வது போன்றவற்றால் எய்தும் பழியினின்றும் வேறு பிரித்துக் காட்ட, இதுவரை எய்தாத பழி என்றார். - இனி, செய்தது ஒன்றெனினும் செய்யாத

பலவும் இணைத்துக் கூறும் அடாத பழியும் என்றவாறு.

- இவ்விடத்து, பகைபற்றி அடாப்பழி கூறியவழி அதனையும் இழுக்கம் பற்றி, உலகம் அடுக்குமென்று கொள்ளுமாகலின் எய்தாப் பழி எய்துவர் என்றார்.

- என்று பரிமேலழகர் கூறும் விளக்கம் சிறப்புடையது என்க.

பழிக்கப் படுவதால் பழியாயிற்று. 3. ஒழுக்கத்தால் ஏற்படும் உயர்வும், இழுக்கத்தால் நேரும் இழிவும்

கூறப்பெற்றதால், முன்னதன் பின் இது வைக்கப் பெற்றது.

க.அ. நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தியொழுக்கம்

என்றும் இடும்பை தரும். - 138

பொருள்கோள் முறை : -

நல்லொழுக்கம் நன்றிக்கு வித்தாகும் என்றும் தீயொழுக்கம் இடும்பை தரும்.

பொழிப்புரை மனம், அறிவு, உடல் ஆகிய மூவகையாலும் கடைப்பிடித்து ஒழுகுகின்ற ஒழுக்கம், பலவகையான நன்மை விளைவுகளுக்கும் விதை போல் இருந்து உதவும். ஆனால், செய்தக்காலும் செய்த பின்னரும் தீயொழுக்கம் விடாது துன்பம் தந்து கொண்டேயிருக்கும்.

நல்லொழுக்கம் நன்றிக்கு வித்து ஆகும் மனம் அறி

மூவகையினும் கடைப்பிடித்து ஒழுகுகின்ற ஒழுக்கம், பல வகையான நன்மை விளைவுகளுக்கும் விதைபோல் இருந்து உதவும். -