பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 அ2-10 ஒழுக்கமுடைமை 14

‘நல்லொழுக்கம்’ என்றதால், மனத்தாலும் அறிவாலும் உடலாலும் கடைப்பிடித்து ஒழுகுகின்ற முழு ஒழுக்கம் என விரிக்க வேண்டியதாயிற்று. என்னை? ஒழுக்கக் கூறுகள் நல்ல என்பது ஒழுக்கக் கூறுகள் முழுமையும் குறிக்குமாகலின்.

நன்றி : நல்ல செயல் நன்மை தரும் விளைவு

நல்லொழுக்கம் கடைப்பிடிப்பவர்க்கு உலகியல் அளவியல், நல்ல விளைவுகள் விளைவது உறுதியாதலை இதில் கூறினார்.

- நன்றி என்பதற்கு வழக்கம்போல், தொன்மை உரையாசிரியர்களான மணக்குடவரும், பரிதியும், பரிமேலழகரும் முத்தி என்றும், இம்மை மறுமை’ என்றும், அறம், புண்ணியம் என்றுமே ஆரியவியல் சார்பாகவே பொருள் கொள்வது, எந்த உலகியல் விளைவுகளுக்கும் அவர்கள் வேதமத வழியாகவே பொருள் கொள்ளும் நோக்கத்தை உறுதி செய்வதாகும்.

உலகியலில் இயல்பாக நடைபெறும் நன்மை, தீமை நிகழ்வுகளுக்குங்கூட, அவர்கள் ‘புண்ணிய, பாவ நிலைகளைக் காரணம் காட்டுவது, மக்களுடைய நல்லுனர்வுகளையும், நம்பிக்கைகளையும், உறுதிப்பாடுகளையும், முயற்சிகளையும் கெடுப்பதாகும்.

- இந்த வகையில், காலிங்கர், தனக்கு எல்லா நன்மைக்கும் துணைக் காரணமாகும். அது யாதோ எனின், நன்னெறியுடைய சான்றோரும் நூல்களும் நன்று என்று அவரவர்க்கு அடுப்பதாகச் சொன்னவற்றின் சாரமானது என்று பொருள் தருவது பெரிதும் மெச்சத் தக்கது என்க. ஆனால் அது நன்கு விளங்குமாறில்லை.

- மேலும் ஆரியமதவியலார், எந்த நன்மைச் செயலும் இவ்வுலகத்திலேயே விளைவு தரும் என்னாது, மறுமையில் தான் பயன்தரும் என்று இட்டுக்கட்டிப் பொய்யின் பொருள் தருவது, மக்களுக்குச் செய்யும் வஞ்சகமும், ஏமாற்றுவதும், சூழ்ச்சியுமாகும். இதனால், இவ்வுலக் வாழ்வையே நம்பிக்கை யிழக்கச் செய்வதாகும் இவர்கள் கூற்று. ‘. . - -

இவர்கள், வித்து என்பதற்கும், காரணம் என்று பொருள் தருவதும், சுற்றி வளைத்துப்பொருள் கூறுவதாகும். . . . * : * இயல்பாகவும் வெளிப்படையாகவும் பொருள் தெளிவுள்ள சொற்களுக்குங்கூடக் குழப்பமாகவும், மயக்கமாகவும் இவர்கள் பொருள் தருவது, அக் குழப்பத்தினும், மயக்கத்தினும் வேதவியல் கருத்துகளுக்கு ஏற்றம் தேடிக்கொள்ளும் கரவு முயற்சியேயாம் என்று கண்டு தெளிக so : . . . .