பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

169


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 169

2. என்றும் தீயவொழுக்கம் இடும்பை தரும் - செய்த பொழுதினும், செய்த பின்னரும் தீயொழுக்கம் விடாது துன்பம் தந்து கொண்டேயிருக்கும்.

- தியொழுக்கம் தீமையான ஒழுக்கம் அஃதாவது இழுக்கம்.

என்றும் என்றது, அன்றும், இன்றும், என்றும் என்றவாறு அஃதாவது, தீயொழுக்கம் நடந்த பொழுதும், நடந்த பின்னரும், இனித்தொடர்ந்தும் என்றவாறு. என்னை: தீயொழுக்கம் நடந்தபொழுது மனத்தளவில் துன்பமும், பின்னர் அதன் தாக்கம் அறிவளவிலும், அதன் பின்னர் உடலளவிலும் துன்பம் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும்

என்றார், என்க.

- இடும்பை நானாபுறத்தும் வரும் துன்பம், இடுதல் இட்டு நிரப்புதல்.

தீயொழுக்கினன், கண்களில் எப்பொழுதும் ஒழுக்கக் கேட்டுக்குரிய சூழல்களையே பார்ப்பதால், நல்ல காட்சியால் வரும் இன்பத்தை அவன், இழந்து நிற்கிறான். அதனாலும் துன்பப்படுகிறான்.

- அவன் காதுகளில் எப்பொழுதும் தீயொழுக்கச் சூழலில் அவன் செவிமடுத்த ஒலிகளே நிறைந்திருப்பதால், வேறு பிற நல்லொலிகளைக் கேட்க விரும்பாமல், அவற்றால் வரும் இன்பங்களை இழந்து நிற்பான். அதனாலும் துன்பப் படுகிறான்.

- அவனின் நுகர்ச்சியும், சுவையும், உடலும் என்றுமே முன்னது போலும் தீயொழுக்க நிகழ்வுக்கே அங்காந்து ஏங்கி நிற்பதால், அவ்வப்பொழுது மேன்மேல் வந்துறும் புதுப்புது நன்னிகழ்வுகளில் அவன் மனம் படியாமல் போகிறது. அதனால் அவன் உள்ளத்தில் எப்பொழுதுமே ஒருதுயரச் சூழலே, எதையோ இழந்து தவிப்புறும் துன்புணர்வே, சூழ்ந்து, அவனை அன்றாடப் புதுமை உலகச் செயல்களில் ஈடுபாடு கொள்ளவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கும்.

- அவன் அறிவும் மேற்சிந்தனையின்றிப் பழைய அல்லொழுக்க இன்பத்திலேயே அலமந்து, அது போலும் ஒரு சூழலையே அவாவிக் கிடக்கின்றது. அவன் உடலும், ஆங்கு நிகழ்ந்த மறைவொழுக்கக் கேட்டிலேயே திளைத்து மூழ்கித் தினவுற்றுக் கிடப்பதால், நடைமுறை நிகழ்வுகளில் ஈடுபட்டுத் திளைக்காமல் அல்லலுற்றுக் கிடக்கின்றது. சங்கிவற்றாலும், பொருள் இழப்பாலும், புலனிழப்பாலும், பழிதூற்றலாலும் அவன் அன்மவும் அமைதியுமின்றி என்றும் இடும்பையுள்ளேயே மூழ்கிக் கிடப்பான் என்று தெற்றென அறிந்து கொள்க. -