பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

TZO அ-2-10 ஒழுக்கமுடைமை 14

“தீயொழுக்கம் தரும் என்றது. தியொழுக்க உணர்வுகள் தொடர்ந்து தரும்

என்றவாறு, . இதற்குப் பரிமேலழகர் பொருள் கூறுகையில் தீயொழுக்கம் பாவத்திற்குக்

காரணமாய் இருமையினும் துன்பம் பயக்கும் என்று உரைப்பார். இஃது, அவரின் ஆரியவியலின் அடிப்படைக் கூறு. - உலகியல் நிகழ்வுகளுக்கு உரிய விளைவுகளும் உலகியலே சார்ந்தன.

அவற்றுக்குப் புண்ணிய பாவ உணர்வு பூசப்பெறுதல், அவர்களின் மதவியற் கோட்பாடாம் என்க.

மாந்தவியலுக்கு மதிப்பளியாத தன்மையே அவர்களின் மதவியலாகும்.

- மதவியல் என்பது புறப்பார்வை, மாந்தவியல் என்பது அகப் பார்வை.

- மாந்தவியல் நிகழ்வுகளுக் கெல்லாம் மதவியற் பொருள் கொள்ளுவது, இல்ல ல் இருந்து கொண்டு, அதற்குப் புறவியலாகிய துறவறத்தை நினைப்பது போலாகும். அறிவுப் பிறழ்ச்சியே என்க. அறிவு, ஆங்காங்கு நிகழும் நிகழ்வுகளுக்கு வேறொரு கற்பனை யிடத்துப் பொருத்தி விளைவு காண்டது. எனவேதான் மதவியல் மயக்கவியல், அறிவு மழுக்கவியல் என்று மாந்தவியல் அறிஞர் கருதுவர். - மேலும், தீயொழுக்கம் தொடர்ந்து தீமையும் துன்பங்களும் தருவது போல், நல்லொழுக்கம் தொடர்ந்து, தமக்கு மட்டுமன்றி, அவரைச் சார்ந்தாருக்கும், ஏன் பிறங்கடையினருக்குங்கூட நன்மை தருவது என்னும் குறிப்பைத்தான் வித்து என்னும் சொல்லால் உணர்த்துவர். என்னை? . . . . . .

வித்து, தான் விளைந்து பயனைத் தருவது போலவே, அடுத்தடுத்து அப்பயன் தொடர்பயனாக அடுத்து அதுபோலவே பல வித்துகளையும் உருவாக்குதலும், அவ்வவ் வித்துகளால், அவ்வக் காலங்களிலும், அவ்வவ் விடங்களிலும் உள்ள மக்களினம் பயன் பெறுதலும் தொடர்ந்து நிகழ்வனவாகும். .

எனவே, ஒழுக்கக் கேடன், தனக்கு மட்டுமன்றித் தன்னைச் சேர்ந்தார்க்கும், சார்ந்தார்க்கும் கேட்டைத் தொடர்ந்து விளைவிப்பது போல், நல்லொழுக்க முடையவனும், அவனைத் தொடர்ந்த மாந்தப்

பயிர்களுக்கு நல்வித்தாக அமைவதையும் குறிப்பால் உணர்த்தினார் என்க. இல்லெனில் வித்து என்னும் சொல்லை அவர் பயன்படுத்தத் தேவையின்றாம் என்க. -

ஒர் ஒழுக்கக் கேடனுடைய L பற்றிய நோயும் உள்ளத்தில் இடங்கொண்ட தீயவுணர்வுகளும், அறிவில் அளாவிக் கிடக்கும்