பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

173


திருக்குறள்-மெய்ப்பொருளுரை பெருஞ்சித்திரனார் 173

கூறிவிடுவது வாய்தவறிச் சொல்வதாகும் என்க. தவறுதல் - முறை தவறுதலாம். 3. ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே - ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பவர்க்குப்

பொருந்தாது.

‘ஏ'காரம் தேற்றம். உறுதிப் பொருள் தந்தது. - ஒழுக்கம் உடையவர்க்கு’ என்றதால், இஃது ஏற்கனவே ஒழுக்கம் கடைப்பிடிப்பவர்க்குச் சொல்லப்பெற்றது என்னும் குறிப்புணர்த்தினார். ஒல்லாவே - என்பதற்கு முன் கூறிய உரையாசிரியர் அனைவரும் பிறர் சிலரும், முடியாது இயலாது பிறவாது என்று பொருள் தருவர். - இயலாத முடியாத ஒன்றை நெறியாகக் கடைப்பிடியாகக் கூறுவது தேவையின்றாகலின், அப் பொருள் பொருந்துவதன்று. மேலும் ‘வழுக்கியும் என்னும் சொற் பயன்படுத்தமும் வறிதாகிவிடும். - வழுக்கியும் என்று கூறுவது, அச்சொல் வெளிவந்த நிலையே அன்றி,

அடங்கிய நிலையன்று.

. இயலாதது, முடியாதது என்பன சொல் வெளிவராத நிலை என்க.

- மேலும் சொல்வெளிவராமல் அடங்கி நின்ற நிலையில் அது தீய

சொல்லோ கருத்தோ என்று எவ்வாறு அறிவது?

. எனவே, வழுக்கியும் என்பதும், தீய என்பதும், சொலல்’ என்பதும் ‘அவர்தம் வாயினின்று தவறுதலாகத் தீய சொல்லோ கருத்தோ வெளிவந்த நிலையினையே உறுதிப்படுத்தும் சொற்கள் என்க.

- ஆகவேதான் அவ்வாறு வெளிவருதல் அவர் கடைப் பிடித்தொழுகும் பெருமைக்கு அவ்வாறு கூறியது. அல்லது கூறுவது பொருந்தாது “கூடாது என்று கடிந்து நெறி கூறினார் என்க. - சொல் வராது, சொல்ல இயலாது, முடியாது என்பது, ஊமையனால்

பொய் கூற இயலாது என்பதைப் போன்றது. - சொல்லுதல் நிகழ்ந்ததைக் கொண்டுதான் அவ்வாறு சொன்னது அல்லது சொல்வது பொருந்தாது அல்லது கூடாது; எனவே இனி அவ்வாறு வாய்தவறியும் கூறற்க என்று ஒழுக்க நெறி கூறினார்.என்க. - இனி, பரிமேலழகர் இங்கும், மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டதுபோல, தீய சொற்களுக்கு விளக்கம் தருகையில், ‘பிறர்க்குத் திங்கு பயக்கும் பொய் முதலியனவும், வருணத்திற்கு உரிய வல்லனவுமாம் என்று தம் ஆரியக் குறும்பைக் காட்டியிருப்பது