பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

175


திருக்குறள் மெய்ப்பொருளுரை பெருஞ்சித்திரனார் f75 வாழ்வியலுக்குத் தேவை முதலிற் கூறப்பெற்ற நூல்களேயாம் என்க.

2. உலகத்தோடு ஒட்ட ஒழுகல் கல்லால் அறிவிலாதார் உலகினர் தேர்ந்த பண்பியல் நிலைகளோடு பொருந்தி ஒழுகத் தெரியாதவர்கள் அறிவில்லாதவர்களே.

உலகத்தோடு - உலகத்தோர் இதுவரை தேர்ந்து கொண்ட பண்பியல்

நிலைகளோடு. என்னை?

- உலகம் அறிவியலார் வயப்பட்டு இயங்குவதெனினும், இதுவரை அது தேர்ந்து கடைப்பிடித்து ஒழுகும் பண்பியல் நிலைகளால்தான் நிலைப்பெற்று இயங்குகின்றது. அறிவியலார் வயப்பட்டு இயங்கும் உலகம் பல முன்னேற்றங்களை விளைவாகக் கொண்டதேனும், மக்கள் வாழ்வியலுக்கு அடிப்படையானவை இதுவரை வாழ்ந்த சான்றோர்களின் தேர்ந்து கொண்ட பண்பியல் கூறுகளே என்பதை அவ்வறிவியலாளரும் ஒப்புவர். - - இதனை, நூாலசிரியரும் பல்வேறிடங்களில் பல்வேறு வகையாக

வலியுறுத்தி ஒப்புவதும் காண்க:

- அவர் பண்புடைமை அதிகாரத்துள், - ‘பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுவின்றேல்

மண்புக்கு மாய்வது மன்’ - 996 அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்

மக்கட்பண்பு இல்லா தவர்’ ... , - 997

என்று கூறி,

நயனொடு நன்றி புரிந்த பண்புடையார்

பண்புபா ராட்டும் உலகு’ . - - 994 அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும் பண்புடைமை என்னும் வழக்கு - 992

என்று, அதற்கு விளக்கமும் கூறுவர்.

- இனி, உலகம் என்பது பண்புடைமையும் ஒழுக்கமும் கொண்ட சான்றோர்பாற் பட்டது என்க. என்னை? எல்லாவகையான நன்னிகழ்வுகளும் அவர்தம் வழியாக நிகழ்வனவே என்பது அறிஞர் முடிபு. அவையே உலகவழக்கு எனப்பெறும். அவர் வழித்தாம் இல்லறமும் பிறவறங்களும் நிகழ்த்தப் பெறுதல் வேண்டும் என்பதும், அப்பொழுதுதான் அவை சிறக்கும் என்பதும் நூல்வல்லார் குறிப்பு.