பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 அ-2-10 ஒழுக்கமுடைமை 14 அவ் வழக்குகள்தாம் நூல்களுள் எழுதப்பெறுதல் என்பது தமிழியல் இலக்கிய வழக்குமாம் என்க.

‘வழக்குஎனப் படுவது உயர்ந்தோர் மேற்றே நிகழ்ச்சி அவர்கட் டாக லான - தொல்:1592,

(வழக்கு - உலக வழக்கு உயர்ந்தோர் கிளவியும் வழக்கொடு புணர்தலின்

வழக்குவழிப் படுத்தல் செய்யுட்குக் கடனே’ - தொல்: 1168.

இடித்து வரை நிறுத்தலும் அவரதாகும்

கிழவனும் கிழத்தியும் அவர்வழி நிற்றலின் - தொல் ; 1101.

ஏனெனில்,

‘பெரியோர் ஒழுக்கம் பெரிது’ - தொல்: 1096.

- எனவே, உலகம் என்பது சான்றோரையும், உலக ஒழுக்கம் என்பது அவர் கொண்ட பண்பியலையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது என்பதை நன்கு விளங்கிக் காண்க

இக்கருத்தையே நூலாசிரியரும்,

‘உலகம் தழிஇயது ஒட்பம்’ - 425 ‘எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு அவ்வ துறைவது அறிவு’ - 426

என்று அறிவிலக்கணத் தானும்,

“செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து இயற்கை அறிந்து செயல்’ - 637 என்று, இயங்கியல் இலக்கணத்தாலும் எடுத்துக்கூறி, இவ்வறிவினதும், பண்பினதும், இயங்கியலினதும் ஆகிய உண்மைகளைக் கற்றறிந்தும், அதன்படி ஒழுகாதவர்களைப் பேதையுள் பேதைகள் என்றும் கடிகிறார்.

‘ஒதி யுணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தாண்டங்காப் பேதையின் பேதையார் இல்’ - 834

என்பது காண்க. - இனி, இதற்கு விளக்கம் கூறுகையில், பரிமேலழகர், இஃது, ஒழுக்கமாவது உயர்ந்தார் ஒழுகின நெறியில் ஒழுகுதல் என்பதும், அவ்வொழுக்கம் கல்வியினும் வன்மையுடைத்து என்பதும் கூறிற்று

என்பது அறிக. 1. “.