பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

அ-2-7 செய்ந்நன்றி அறிதல் - 11


 இவ்வுலகின்கண், செய்யாமற் செய்த உதவிகளாகக் கருதப் பெறுபவை இரண்டே அவை நில விளைவாகிய பயிர் விளையும், வான்விளைவாகிய மழையுமே ஆகும். இவ்விடத்துக் கைம்மாறு வேண்டாக் கடப்பாடு மாரி மாட்டு என்னும் குறளும் நினைக்கற். பாலது. இவ்வுதவிகளுங்கூட மக்களுக்குள் ஒருவர்க்கொருவர் செய்யாமல் செய்யும் உதவி போல் முற்கூறிய ஏதுக்களால் பெருமையும் அருமையும் சிறப்பும் உடையன அல்ல. எனவே இவர்களது செய்யாமற் செய்த உதவிபோல் வையகமும் வானகமும் செய்வது கடினம் - அரிது என்றார்.

இனி, அரிது’ என்னும் சொல் அறவே இயலாது என்னும் பொருளைத் தராமல், ஒரிருகால் இயலும் என்னும் பொருளையும் தருவதால், ஒரோவொருகால் இயற்கையாக அவ்வாறு நிகழ்வதும் உளதாகலாம் என்று குறிப்பின் உணர்த்தினார் என்றலும் சாலும்


இனி, இக் குறட்பகுதிக்கு, மணக்குடவர், ‘உலகமும் சுவர்க்கமும் நிறையாற்றுதல் அரிது என்றும், பரிதியார், பூமி ஆகாசம் இரண்டும் நிகரல்ல என்றும், காளிங்கர், ‘உதவியின் பெருமைக்குக் கைம்மாறு சீர்தூக்கின் அவர்க்கு இம்மை மறுமை இரண்டுக்கும் நிறையாற்றுதல் அரிது என்றும், இற்றைப் பாவாணர் உள்ளிட்ட பிறர் பிறரும் ஏறவும் தாழவும் அவர்களையொட்டியும் பற்றியுமே முற்றிலும் பொருந்தா வுரைகளையே புகன்றனர் என்க. அவை கொள்ளத்தக்கன a.

அவ்வாறு அவர்கள் தவறாகப் பொருள் கொண்டமைக்கு ‘உதவிக்கு ஆற்றுதல் அரிது’ என்று இயைபு படுத்திப் பொருள் கண்டதே காரணமாம் என்க. அதனை அவ்வாறு கொள்ளாமல் ‘இணையாக என்னும் ஒருசொல்லை இடையிட்டு, ‘உதவிக்கு இணையாக ஆற்றுதல் அரிது’ என்று வருவித்துப் பொருள் கொள்ளுதலே தக்கதும் ஒக்கதுமாம் என்க.

3. இதில், செய்த நன்றியை அறிதல் (நினைத்தல்) வேண்டிய இன்றியமையாமையை உணர்த்தினார். -

க0உ.

காலத்தி னால்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது. 102

பொருள்கோள் முறை இயல்பு.

பொழிப்புரை ஒருவர்க்கு (இக்கட்டான,தேவையான ) காலத்தில் செய்த நல்லுதவி, (தம் மதிப்பிலும், பொருள் அளவிலும்) சிறியதாகவே