பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 அ-2.11 பிறனில் விழையாமை 15

அ-2 இல்லறவியல் அ-2-11 பிறனில் விழையாமை 15

அதிகார முன்னுரை

‘பிறனில் விரும்பாமை என்பது, பிறனுக்குரிய இல்லாளை (மனைவியைக் காமத்தின் விரும்பாமை என்று கூறியது, விழைதல் ஆசையால் (காமத்தால்) விரும்புதல். -

பிறனுடைய உடைமைகளைத் தான் விரும்பாமை என்னும் நிலையில், இஃது உடல் விழைவால் நேரும் முதல் குற்றமாம் என்க.

பிற பொருள்களை விரும்புதல் இதனை அடுத்தது.

தன்னொழுக்கத்தைக் கடைப்பிடித்து ஒழுகுபவன், பிறர்பாலும் அத்தகைய பொதுவொழுக்கத்தைக் கடைப்பிடித்து ஒழுகுதல் நேர்மையான கடைமையாதலின், இஃது ‘ஒழுக்கமுடைமை யினை அடுத்துக் கூறப்பெற்றது, என்க.

மக்களினம் படிநிலை வளர்ச்சி பெறாமல், காட்டு விலங்குகள் போல் வாழ்ந்திருந்த பொழுது, முதன்முதல் அச்சம் என்னும் அறியாமை உணர்வு தலையெடுத்தது, முதல் அறிவியல் வளர்ச்சியாம் என்க.

‘அச்சம் என்னும் அறியாமை உணர்வினின்று துணிவு என்னும் அறிவு துலங்கியது.