பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

179


திருக்குறள்-மெய்ப்பொருளுரை_பெருஞ்சித்திரனார் T/9

துணிவினின்று எதிர்ப் பாலாரிடம் ‘அன்பு என்னும் ஈடுபாட்டுணர்வு மலர்ச்சியுற்றது. இது முதலாவது மனவியல் வளர்ச்சி.

பின்னர், அஃது உணர்வுப் பகிர்வு உணர்வாக வளர்ச்சியுற்றது, முதல் பண்பியல் வளர்ச்சி.

‘உணர்வுப் பகிர்வு பின், ஆண்பெண் காதலுணர்வையும், கூட்டக் கலப்பு என்னும் குழுவுணர்வையும் கால்கொள்ளச் செய்தது, இரண்டாவது பண்பியல் வளர்ச்சியாம்.

இவ் விரண்டாவது பண்பியல் உணர்வின் அடிப்படையில், இலை, தழையுடுத்தல் நாகரிகம் தோன்றியது. பின்னர் அதுவே தோலாடை, பருத்தியாடை நாகரிகமாகப் படிநிலை வளர்ச்சி பெற்றது.

தொடக்கத்தில், தன் இணைவுக்குரியாளைப் பிறர் கூட்டத்தினின்று தனிப்படுத்தித் தனக்குரிய இணைவுறுப்பாகிய இடையுறுப்பைப் பிறர் காட்சியினின்றும் விழைவினின்றும் மறைக்க வேண்டிய தேவையினால், தழையுடை பயன்படுத்தப் பெற்றது.

இத் தழையுடை, தமிழரின் கழகக் கால இலக்கிய வளர்ச்சிக் காலம் வரை தொடர்ந்து நின்று, அவ் விலக்கியங்களிலும் பரவலாகக் காணப்பெறுவதே தமிழரின் பழம்பெரும் நாகரிகத் தொன்மையைக் காட்டுவதாகும்.

“பல்பூம் பகைத்தழை நுடங்கும் அல்குல்’ - நற்:8 ‘...02:37, 16 மார்ச் 2016 (UTC)~~ சேர்ந்து செறிகுறங்கின் பிணையல்அம் தழை தைஇ - நற்:170

(குறங்கு - தொடை குறங்கின் பிணையல் பெண்ணுறுப்பு

கோடுஏந்து அல்குல் தழையணிந்து - நற்:368 ‘வயல்வெள் ஆம்பல் உருவ நெறித்தழை ஐதுஅகல் அல்குல் அணிபெறத் தைஇ’ - நற்:390 ‘தழையணி அல்குல் மகளிர்’ - குறுந்:125 திருந்துஇழை அல்குற்குப் பெருந்தழை உதவி - குறுந்:214

துத்திப் பாந்தள் பைத்துஅகல் அல்குல் திருந்திழைத் துயவுக் கோட்டு அசைத்த பசுங்குழைத்தழை

- குறுந்:294 தழைதாழ் அல்குல் - குறுந்:345 ஒண்தழை அயரும் துறைவன்