பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i8O அ-21 பிறனில் விழையாமை 5

தண்தழை விலைஎன நல்கினள் - ஐங்:146 ‘கானல் ஞாழல் கவின்பெறும் தழையள் - #ti:180 ஆய்தழை துடங்கும் அல்குல்’ - ஐங்:291 ‘தண்தழை உடையை’ - அகம்:7

(உடையை உடை உடுத்தவளே) ‘மணிப்பூம் பைந்தழை தைஇ’ - அகம்:20 இவ்வாறு, தழைஉடை அணிந்ததுதான், மக்கள் இனத்தில் பண்பாட்டின் மூன்றாவது படியும், நாகரிகத்தின் முதல் படியும் என்க.

கழகக் கால இலக்கியங்களுள் தழையுடை காணப்பெறும் நிலை, நாகரிகம் நன்கு வளர்ந்திருந்த, மாழை (உலோகக் காலத்தினும் தாண்டியது எனினும், அஃது, அத்தொன்மைப் பழக்கவுணர்வின் தொடர்ச்சிச் சாயலே என அறிதல் வேண்டும்

தொடக்கக் காலத்துப் பனையோலைச் சுருட்டினால் ஆகிய காதோலை, இன்னும் தென்புலத் தமிழப் பெண்டிர் அணிகின்ற சாயலைப் போன்றது, அதுவென்க. .

தழையுடை நாகரிகத்தின் பின் மக்களின் மனப்பண்பும், வாழ்வியலின் புறவளர்ச்சிகளும் படிப்படியாக வளர்ச்சி பெற்றன.

அதே பொழுது, பண்பாட்டின் கூறுகளும் கூடவே வளர்ச்சியுறத் தொடங்கின. அவ்வகையில் பெண்பாலார்க்கு நானவுணர்வும், ஆண் பாலார்க்கு மானவுணர்வும் கொஞ்சங் கொஞ்சமாகக் காலூன்றி வளரத் தொடங்கின. நாணவுணர்வும், மானவுணர்வும் மாந்தப் பொது வுணர்வுகள் ஆகின.

இந் நானவுணர்வு தான் விலங்கினத்திடமிருந்து மாந்தனை முதன் முதல் வேறு பிரித்தது. நானவுணர்வும், மானவுணர்வும் விலங்குகளிடம்

மாந்தப் பண்பியலின் அடிப்படை உணர்வுகளான இந் நாணவுணர்வையும், மானவுணர்வையும், ஆசிரியர் வலியுறுத்தியும், விளக்கியும் கூறும் நூற்பகுதிகள் கவனிக்கத் தக்கன. ‘ஊண்உடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல

நாண்உடைமை மாந்தர் சிறப்பு’ - 1012 ‘ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும் நன்மை குறித்தது சால்பு’ ... -- - 1013

- இவை யிரண்டு கருத்தானும் விலங்குகளுக்கும் மக்களுக்கும் வேறுபாடு