பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

183


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 183 பெற்றனர். அவர்கள் பொன்னுக்கோ, பொருளுக்கோ, தங்களிடம் தொடர்பு கொள்ள வரும் ஆடவர்களிடம் தங்களின் கற்பை விற்றனர். அவர்களுக்கு முல்லைமாறிகள் என்றும் குமுகாய நிலையில் இழித்துரைக்கப் பெற்றனர், முல்லை - கற்பு; மாறுதல் விற்றல்). அவர்களுக்கு பரத்தை (பரந்துபட்டு ஒழுகுபவள் என்னும் பெயர் இலக்கிய வழக்காக வேரூன்றியது. பிற்காலத்து அவர்கள் விலைமகளிர், பொருட்பெண்டிர் என்றும் அழைக்கப் பெற்றனர். பலர் தொடர்புடைய பெண் பரத்தை எனப் பெற்றது போல், பலர் தொடர்புடைய ஆண் பரத்தன் (131) என இழித்துரைக்கப் பெற்றான்.

இல்லற வாழ்வு கொண்டவர்கள் இத்கு பேணா ஒழுக்கத்திற்கு நாணினர். (தொல்: 096: 15. பெரியோர் ஒழுக்கம் பெரிது’ எனப் பேணினர். (தொல்: 096 17). பெரியோர் சென்ற அறவழிப் பிழையாது (மதுரைக்12) இல்லறம் ஒழுகினர். ஆன்றோர் சென்ற நெறிவழிச் செல்பவனையே மக்கள் மதித்தனர்.

ஆன்றோர் செல்வழி வழாஅச் சான்றோன்’ - நற் : 223 அன்றைய ஆடவரின் பரத்தையர் தொடர்பு மறுக்கப்பெற்றது; இகழப்பெற்றது. அதனால் இல்லறத்துப் பல பூசல்கள் விளைந்தன.

மனைவி, இல்லக் கிழத்தி எனப்பெற்றாள். மனைவி தவிர, வரைவில் பெண் ஒருத்தியுடன், திருமணமானவன் தொடர்ந்த தொடர்பு கொண்டால், அவள் அவனின் காமக்கிழத்தி எனப்பெற்றாள்.

ஆடவர் தம் காமக் கிழத்தியரொடும், சிலகால் பரத்தையரொடும் கொண்ட தொடர்பு பழந்தமிழ் இலக்கியங்களுள் காணப் பெறுகிறதே தவிர, பிறனொருவன் மனைவியொடு கொள்ளும் தொடர்பு, யாமறிந்த வரையில் அவற்றுள் யாண்டும் காணப்பெறல் இல்லை. தமிழியல் மரபில் அத்தீயவொழுக்கம் பேணப்பெறுவதும் காணப் பெறுவதும் இல்லை; ஓரிரண்டு நிகழ்வுகள் உலகியலில் காணப் பெறினும், இலக்கியங்களுள் காட்டப் பெறுவது இல்லை.

ஆனால், ஆசிரியர் காலத்து அவ் வழுவொழுக்கமாம் பிறனில் விழைதல் கண்டிக்கவும் இகழவும் பெறுதல், அக்கால், அது தலையெடுத்திருந்தது என்பதையே காட்டுகின்றது, என்க. அதற்கு ஆரியர் வரவே காரணமாயிருத்தல் வேண்டும் என உய்த்துணரப் பெறுகின்றது. அவர்தம் ஊடுருவலால் கெட்ட தமிழியல் பண்பாட்டுக் கூறுகளுள் இதுவும் ஒன்றாயிருத்தல் வேண்டும் என்பது தெளிவாகிறது.

ஏனெனில், ஆரியர் வழியில் அவர்தம் மனவிையர் வேறு பிறரிடம் மேவுதல், அவர்தம் அதர்வன வேதத்துள்ளும் அவ்வாரிய