பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 அ-2.11 பிறனில் விழையாமை 15

இலக்கியங்களுள்ளும், அவர்தம் இதிகாச புராணங்களுள்ளும் மிகவும் பரவலாகக் காணப்பெறுகின்ற செய்தியாகும். அவர்தம் காம நூல்களுள்ளும், இவ் வழுவொழுக்கம் பரடகீயம் அல்லது பாரதிகம் என்னும் பெயர்களால் விளக்கப்பெறுவது, நோக்கத்தக்கது. வாத்சாயனாரின் காமசூத்திரம், கொக்கோக முனிவரின் கொக்கோகம், காமாந்தகரின் காமசாத்திரம் ஆகிய நூல்களுள் அதனைக் கண்டு கொள்க

இத் தகைவிலா அல்லொழுக்கத்திற்கு, வான்மீகியார் இராமாயணமும் வியாசரது மகாபாரதமும் அவற்றுள் வரும் இந்திரன், சூரியன், சோமன், வருணன், அக்னி, விஷ்ணு, பிரம்மன், தாருகா கானகத்து இருடிகள் போன்றவர்களின் பிறன்மனை விழைந்த களவொழுக்கக் கதைகளுமே சான்றுகளாக நிற்கின்றன. அவர்தம் தேவியரும் அத் தீயவொழுக்கினரே.

வால்மீகி இராமாயணம், தொன்மைக்கால அசாம் பகுதியில் இருந்த இலங்கா என்னும் நாட்டில் நடந்த ஒரு சிறுகதை தழுவிய ஒரு பெருங்கதையே. அதில் கூறப்பெறும் இராவணா என்னும் அரசன் ஒரு சிற்றரசனே. அவன் தமிழ்ப் பாண்டியப் பேரரசன் தென்னிலங்கை இராவணன் அல்லன், தென்னிலங்கை என்று கூறும்பொழுதே வடஇலங்கை ஒன்றிருந்தது. பெறப்படுகிறது. வட விலங்கையில் நடந்த அக்கதையைத் தென்னிலங்கையில் நடந்ததாக வான்மீகியும் அவரைப் பார்த்துக் கம்பனும் கதைசெய்தது வரலாற்றுப் பிழையே),

- தென்னிலங்கை இராவணன் சீரிய வொழுக்கினன். அவன் தன் மனைவியைத் தவிர வேறு பெண்களை ஏறெடுத்தும் பார்த்தவ னல்லன். பிறன்மனை நோக்காத பேராண்மையுடையவன்.

- வான்மீது காட்டிய இலங்கை அரசன் தொன்மை அசாம் பகுதியில் நீர்சூழ அமைந்திருந்த லங்காபுரி என்னும் சிறு தீவப் பகுதியை ஆண்டிருந்த பிராகிருதப் பேரரசன் இராவணா என்பவனே. முனைவர் சங்காலிய,

- அசாம், இலங்காபுரி, ராவணா என்னும் அரசனை, நம் தொன் பாண்டியத் தென்னிலங்கை இராவணனாகக் கொண்டு நம் பெரும்பாவியப் பெரும்பாவலன் கம்பனும், வடமொழிப் பாப்புலவர் வால்மீகியை மொழிபெயர்த்துக் கூற, தமிழியல் பண்பாட்டுக்கேற்ப இராமாயணம் பாடிவிட்டான். - .

- இதனால், தமிழ்ப்பேரரசன் தென்னிலங்கை இராவணனுக்குப் பிறனில் விழைந்த பொருந்தாப் பெரும்பழி விழுந்துவிட்டது. இது வரலாறு தெரியாமையால் நேர்ந்த பிழையே யன்றித் தமிழியற் பண்பாட்டில் நேர்ந்த

- கம்பன் ஆரியர் சூழ்ச்சியறியா அருந்தமிழ்ப் பாவலன். ஆரியர் செய்த சூழ்ச்சி அதுமட்டுமன்று. கம்ப இராமாயணம் எழுதப் பெற்று அரங்கேறிய