பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

185


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 185

பின்னர், கம்பனின் பாவலர் மரபு வளரக் கூடாதென்று, அவன் மகனும் பெரும் புலவனுமான அம்பிகாபதிக்கும் குலோத்துங்கச் சோழன் மகள் அமராவதிக்கும் நேர்ந்த மெய்ம்மைக் காதலை அரசனிடம் குற்றமாய் விரித்துக் காட்டி, அரசனைக் கொண்டு, சூழ்ச்சியால் அம்பிகாபதியில் தலையை வெட்டுவித்துப் புலமை மரபை ஆரியர் அழித்தனர் என்க.

இவ் வாரியர் தீயொழுக்கத்தினை நூலாசிரியரும் நூலும் கயமை’ அதிகாரத்துள் குறிப்பாகக் கடிவது உன்னத் தக்கது.

தேவர் அனையர் கயவர் அவருந்தாம் மேவன செய்தொழுக லான்’ - sp73

இதற்குப் பரிமேலழகர் தரும் பூசிமெழுகல் உரை மெய்ப்பொருளன்று. விளக்கம் ஆங்குக் கூறப்பெறும்,

எஃது எவ்வாறாயினும், ஆரிய அயலார் தமிழ்நிலத்துள் புகுந்து, தமிழியற் பண்பாடுகளை ஆரியப் பண்பாடுகளாகக் கொண்டும், ஆரியப் பண்பாடுகளைத் தமிழியற் பண்பாடுகளிற் கொடுத்தும், ஊடுருவல் செய்தும் அவற்றில் நிறைநிலையைக் குறைத்தும், ஒரு பண்பாட்டியல் புரட்டல் நிகழ்ந்து கொண்டிருந்த காலத்தில்தான், நூலாசிரியர், தமிழ் முன்னையோர்தம் தமிழியற் பண்பாட்டின் தனிச் சிறப்பினை நிலை நாட்டுதற்கு இந்நூல் தந்தார் ஆகையால், அன்று தமிழகத்துப் புகுந்த அல்லொழுக்கமாகிய இப் பிறனில் விழைதலையும் கண்டிக்கவும் கடியவும் வேண்டியிருந்த தென்க -

இனி, பிறனில் விழைதல் இங்கு ஒருபாற் குற்றமாகக் குறிக்கப் பெறினும், இஃது இருபாற் குற்றமே என்க.

இருபாலார் நிலையினும் நிகழப்பெறும் குற்றமாக இஃதிருப்பினும், ஆடவர்பால் நிகழும் ஒருவழிக் குற்றமாக, இங்குக் குறிக்கப் பெறுதல் அவர் ஆளுமையுடையவராகக் கருதப்பெறுவதாலேயே என்க.

பிறரது உடைமையைத் தான் வெளவுதல் குற்றமும் அறனல்லாத செயலும் ஆகையால், பிறரது உயிருடைமையாகிய பிறன்மனைவியைத் தான் விழைவதும், வாய்ப்பின் நுகர்வதும் உயிர் வழிக் குற்றமே என்க.

பொதுநலவுணர்விற்கு இது மாசு கற்பிப்பதும், தடையேற் படுத்துவதுமாகையானும், இது, பெரும்பாலும் ஒன்றிப் பழகும் இல்லறத்தார் கண்ணே நிகழ்வதாகையானும், இஃது இல்லறவியலிலும், ஒழுக்கமுடைமை கடைப்பிடிப்பார் பெண்ணியலார் வழிநிகழும் இக்குற்றம் கடியவேண்டுவனவற்றுள் தலைமையாய குற்றமாகலின், இஃது ஒழுக்கமுடைமையின் பின்னும் வைக்கப் பெற்றதென்க