பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

187


திருக்குறள் மெய்ப்பொருளுரை பெருஞ்சித்திரனார் 37

எனவே, அறம் பொருள் கண்டார் என்பதற்கு அறமும் பொருளும் என்று உம்மைத் தொகையாகக் கொண்டு விரித்துப் பொருள் கொள்வதை விட வேற்றுமைத் தொகையின் விரிவாகக் கொண்டு, ‘அறத்தினது பொருளை நன்கு ஆய்ந்து கண்டார் என்று பொருள் கொள்வதே மிகச்சரியான பொருளாம் என்க. என்னை?

- பொருளியல் நூலில் இல்லறவொழுக்கம் சாற்றப் பெறாமல், அறவியல்

நூலின்கண்ணே அது சாற்றப்பெறும் ஆகலின்.

அறவியல் நூலின்கண் கூறப்பெறும் பொதுவொழுக்கத்தின் கூறுபாடுகளுக்குள்ளேயே தன்னொழுக்கமும், பொதுவொழுக்கமும் அடங்கும்.

இல்லறம் மேற்கொண்டு ஒழுகுபவன். தன்னைப் போல் அண்டை யயல் இல்லறத்தார்களையும் கருதவேண்டும் என்பது பொது அறம்.

ஏனெனில் தன் மனைவி மீது தான்கொண்ட அன்பையும் பாதுகாப்பையும் போலவே, அண்டை யயல் வீட்டானும் அவனுடைய மனைவி மேலும் அன்பையும் பாதுகாப்பையும் மேற்கொண்டு இயங்குவானாகையால், அதற்கு இடையூறாகத் தான் இயங்குவது, பொதுவறத்திற்கே கேடாய் முடியும் என்று உணர்ந்திருக்க வேண்டும் என்பதே நூலாசிரியர் கருத்தாம் என்க. இதுவே மனவியலுக்கும் உலகியலுக்கும் மாந்த உளவியலுக்கும் பொருந்துவதாம் @7Gr.

- இவ்வறவுணர்வு ஒன்றே, அவன் அறநூலைக் கற்று உணர்ந்திருக்க

வேண்டிய ஒன்று. - -

மற்று பொருள் நூலின்கண், இவ்வகைக் குற்றத்திற்கு அரசுத் தண்டனை உண்டு என்பது கூறுப்பெற்றுள்ளது கொண்டு, அஃதுணர வேண்டியே பொருள்நூலும் ஆயப்பெறுதல் வேண்டும் என்று கருதிப் பொருளுரைப்பது சரியான மனவியல் உணர்வு அன்று. அக்கால், அறநூலின் மதிப்புணர்ந்திருத்தலுக்கும், அதனை ஆய்ந்து கற்றிருத்தலுக்கும் பொருளில்லாமல் போகும் என்க.

மேலும், இக்குற்றம் திகழவேண்டாமல் எச்சரித்துத் தடுக்க வேண்டும் என்பதுதான் ஆசிரியர் கொள்கையே தவிர, அது நிகழ்ந்து தண்டனை பெறவேண்டும் என்பதோ, அத்தண்டனையைக் காட்டித்தான் இதைத்

தடுத்து நிறுத்த வேண்டும் என்பதோ அவர் நோக்கமன்று.

மேலும், இக்குற்றத்தின்பாற் படுபவன் அறிநூலைக் கற்றவனாகவோ, அதனை ஆய்ந்து பொருள் கண்டவனாகவோ இருப்பதில் பொருளில்லை என்க. -