பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

17


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 17 இருப்பினும், (அதன் இன்றியமையாமையை நோக்க, இவ் வுலகத்தை

விட

மிகவும் பெரியதாகவே அது கருதப்பட வேண்டுவதாகும்.

சில விளக்கக் குறிப்புகள்:

1.

காலத்தினால் செய்த நன்றி சிறிது எனினும் ஒருவர்க்கு ஒர் இக்கட்டும், ஒரு தேவையும் வந்துற்ற காலத்தில் மற்றொருவர் செய்த உதவி, தம் தகுதியை நோக்கவும், பொருள் அளவைக் கருதவும், சிறியதாகவே இருப்பினும், ‘உதவி வரைத்தன்று’ - என்னும் குறளில் (105) தம் தகுதி நிலையும், தினைத்துணை - என்னும் குறளில் (104) பொருள் அளவும் கூறுவார். காலம் நீண்டு சென்று கொண்டிருத்தலால் பொழுதைக் குறித்தது. கால் நீண்டது. நீண்டுள்ளதாலேயே உடல் உறுப்பையும் குறித்தது. காலுதல் - நீளுதல். நீண்டு சென்று கொண்டிருப்பதாலேயே கால்’ என்னும் சொல் காற்றையும் குறித்தது. கால் து காற்று (காத்து து பெயர்ச் சொல் ஈறு.

சிறிது - “சில் என்னும் வேரடியாகப் பிறந்த சொல். அளவில் சிறுமையைக் குறிக்கும். . சில் - சில - எண்ணளவில் குறைவானது. சில் X பல் பல எண்ணளவில் நிறைவானது. நிறைய இருப்பதால் பல்’ என்னும் உறுப்பையும் குறித்து நின்றது. சில் +து சில்து சிற்று சிட்டு அளவில் சிறிய குருவியைக் குறித்தது. : . . சில்து சிற்று சிறிது - அளவில் கொஞ்சம்.

ஞாலத்தின் மாணப் பெரிது - இவ் வுலகத்தினும் மிகவும் பெரியது. ஞாலம் - உலகம். வானில் பற்றின்றித் தொங்கிக் கொண்டிருப்பதால் அப்பெயர் பெற்றது. ஞாலுதல் தொங்குதல். (உலகம் என்னும்

சொல்லுக்கும் அது தொடர்பான பிறசொற்களுக்கும் ஆன பிற

விளக்கங்கள் முன்னரே (குறள்-1-இல் தரப்பெற்றுள்ளன. மாண பெரிய இங்கு மிகவும் எனும் பொருள் தந்தது. மா மாண் - பெரிய, - மாணப் பெரிது பெரிய பெரிது. மிகவும் பெரிது.

- ஞாலம் கருதினும் கைகூடும் காலம் - கருதி இடத்தால் செயின் - 484

- என்னும் குறளின் கருத்துப் படி, பெரியது.ஒன்றாலேயே சிறியது.